போர் நிறுத்தம் குறித்து புடின் – ஜெலென்ஸ்கியுடன் பேசுவேன்! டிரம்ப் அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் போர் நிறுத்தம் குறித்து பேசுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே உலுக்கி…
அமெரிக்காவை தாக்கிய புயல்: குறைந்தது 23 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் வீசிய சக்திவாய்ந்த புயலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூறையாடிய புயல் காற்று
அமெரிக்காவில் வீசிய சக்திவாய்ந்த புயல் காரணமாக குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல மாநிலங்களில்…
பதினாறாவது மே18முள்ளிவாய்க்கால் கஞ்சி – நினைவுகளைக் கடத்தல்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமை அலுவலகம் முன்பாக இன்று காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல நூற்றுக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் வாங்கி அருந்திச்…
ஒடிஸா: மின்னல் தாக்கி 9 போ் உயிரிழப்பு
ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழையுடன் கடுமையான மின்னலும்…
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது
உண்மையான நல்லிணக்கம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள்…
ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட…
யாழ் . பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள் ,…
கடல் கொந்தளிப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், இன்று முதல் நாளை மறுதினம் வரையில், மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக்…
உறவுகள் கதறியழ கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்
இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த நம் உறவுகளுக்காக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம்(18) மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது.
முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக்…
காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்
காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.…
அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 100 சதவீத வரி விலக்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது’ என்று அமெரிக்க…
இஓஎஸ்-09 செயற்கைக் கோள் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கிய இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. எனினும் சில நிமிடங்களிலேயே இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
விவசாயம்,…
நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா – சீனா ஒப்பந்தம்
நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.
இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் 2035-ஆம்…
உலக நாடுகளுக்கு மீண்டும் கிலியை ஏற்படுத்தியுள்ள கொரோனா ; அச்சத்தில் மக்கள் !
உலக நாடுகளை பெரும் அதளபாதாளத்திற்குள் தள்ளிய கொரோனா வைரஸ் மீண்டும் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல…
யாழில்.119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில்…
யாழில். மணமாகி இரு வாரத்தில் மணப்பெண் உயிர்மாய்ப்பு
திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்
யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே நேற்றைய தினம் சனிக்கிழமை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…
யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி
இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி - ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள்…
கடல் வழியாக தாயகம் திரும்பியவர்கள் விளக்கமறியலில்
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரு படகோட்டிகளையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…
செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகள் இடை…
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித புதைகுழி எனும் சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகள் மழை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால்…
காஸா போர்: கடந்த 2 நாள்களில் 300 பேர் பலி!
காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்குள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் ஊடுருவி அங்குள்ள சுமார் 250…
யாழில் அரச முதியோர் இல்லத்தில் இருந்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
யாழில் அரச முதியோர் இல்லத்தில் வசித்து வந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள அரச முதியோர் இல்லத்தில் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 71வயதான வயோதிபப்…
வடக்கு , கிழக்கில் 23ஆம் திகதி வரையில் மழை தொடரும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் கனமான மழை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்…
முடியால் பறிபோன இரண்டு உயிர்கள் ; விசாரணையில் வைத்தியர்கள் கொடுத்த அதிர்ச்சி
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பல் வைத்தியர் ஒருவர் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள் சவுரப் திரிபாதி- அனுஷ்கா திரிவேதி தம்பதியினர்.…
அமைதிப் பேச்சுவார்த்தை? உக்ரைன் மீது ரஷியா மீண்டும் தாக்குதல்! 9 பேர் பலி!
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷிய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (மே 16)…
பாகிஸ்தான் விமான தளத்தை இந்திய ஏவுகணைகள் தாக்கியது உண்மை: ஷாபாஸ் ஷெரீஃப்
முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், பாகிஸ்தானின் ராணுவம் இந்தியாவுக்கு திறம்பட தக்க பதிலடி கொடுத்துள்ளதன் மூலம், பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றில் ஒரு…
பெயர் குழப்பத்தால் தவறே செய்யாமல் இருமுறை சிறை சென்ற நபர்
மேற்கு அவுஸ்திரேலியாவை சேர்ந்த Marc Smith என்ற நபர், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவுஸ்திரேலியாவின் அவசர சேவைக்கு அழைத்து, படகு உரிமையாளர் தன்னை அச்சுறுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
அதே நேரத்தில், வேறொரு படகு உரிமையாளரிடமிருந்து…
கனடாவில் நாடுகடத்தப்படும் அபாயத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள்
கனடாவில் திறன்வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் (skilled foreign workers) நாடுகடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர்.
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker - TFW) திட்டத்தில் ஏற்பட்ட கடுமையான மாற்றங்களால் பல திறமையுள்ள…
பிரான்சில் பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கடத்த முயன்ற நபர்களால் பரபரப்பு: அதிர்ச்சிப் பின்னணி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கிரிப்டோ கடத்தல்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒரு தம்பதியர் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், முகமூடி…
திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்
- எழில்
திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக…
அதிகரிக்கப்படும் மின் கட்டணம் ; முழு கட்டண திருத்த விபரம்
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி ஜூன் மாதம் முதலாம் திகதி முதல்…
மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 7 கிளர்ச்சியாளர்கள் கைது!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 7 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மக்களை மிரட்டி பணம் பறித்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 கிளர்ச்சியாளர்கள் நேற்று (மே 16) கைது…
ஊடகவியலாளரை பலியெடுத்த விபத்து; சாரதி தப்பியோட்டம்
ஹபரணை - திருகோணமலை வீதியில் அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று இரத்தினபுரியில் இருந்து…
காசாவை வாட்டும் பட்டினி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கவலை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் வளைகுடா நாடுகளுக்கு மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தில், இஸ்ரேலைத் தவிர்த்தது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்பயணத்தின்போது, காசாவில் நிலவும் கடுமையான உணவுப்…
யாழில் போதை ஊசி செலுத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, இளைஞன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றியுள்ள நிலையில்…