;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு

0

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.