;
Athirady Tamil News

இலங்கையில் மின் கட்டணத்தில் வரப்போகும் புதிய முறைமை – கசிந்துள்ள தகவல்

0

இலங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மின் கட்டணத்தை திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, குறித்த புதிய நடைமுறையை கொண்டு வருவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

புதிய கட்டணச் சூத்திரம்
அந்த செய்தியில் மேலும், இந்த புதிய கட்டணச் சூத்திரத்தை இறுதி செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சும் நிதி அமைச்சும் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

ஆண்டின் முதல் சில மாதங்கள் வறட்சியாகவும், ஆண்டின் இறுதியில் அதிக மழையும் கிடைப்பதை இந்த புதிய முறை கணக்கில் கொள்ளும். தற்போதைய முறையில் வறட்சி காலத்தில் கட்டணம் அதிகரிப்பதையும், மழைக்காலத்தில் குறைவதையும் நுகர்வோர் எதிர்கொள்கின்றனர்.

இந்தநிலையில், புதிய முறையின்படி ஆண்டின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

கிடைக்கும் வருவாய்
இதனால் முதல் ஆறு மாதங்களில் மின்சார சபை நட்டத்தைச் சந்தித்தாலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் கிடைக்கும் வருவாய் மூலம் அந்த நட்டத்தை ஈடுகட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த சூத்திரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.