;
Athirady Tamil News

ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

0

ஈரானில் போர் பதற்றம் காரணமாக கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழியை பகுதியளவு மீண்டும் திறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசுக்குச் சொந்தமான ஈரான் நாளிதழின் தகவலின்படி,

கிழக்கு ஈரானின் மீதானா வான்வழிப் பாதைகள் நேற்று காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கும். ஆனால், அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை.

முன்னதாக, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் – இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரானின் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, ஈரானின் வான்வழி மூடப்பட்டிருந்தது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில், இந்த பகுதியளவு வான்வழித் திறப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.