;
Athirady Tamil News

நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை- இன்றும், நாளையும் நடைபெறுகிறது!!

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்ட நிலை திடீரென மாறி உள்ளது. சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆயிரம், 2 ஆயிரம் என ஆஸ்பத்திரி சேர்க்கையும்…

ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு – 4 பேர் பரிதாப பலி!!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில், ஆல்ப்ஸ் மலையில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கி…

யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேர் அதிரடி கைது!!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த 4 பேர் கும்பல் யானை தந்தத்தை விற்று வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கும்பலிடம் வாடிக்கையாளர் போல் ஒருவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த வாடிக்கையாளரிடம் கும்பலை சேர்ந்த ஒருவன்,…

பிரான்சில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்து- இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும்…

தெற்கு பிரான்சின் மார்சேயில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…

நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசுக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு!!

தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. நிலக்கரி சுரங்கம் அமைந்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு…

துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து- 27 பேர் பலி!!

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று…

அமெரிக்கா செல்கிறார் ஷெஹான் !!

உலக வங்கிக் குழும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்த கால கூட்டங்களில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டன் டிசியில் இன்று…

புத்தாண்டு கொண்டாட ஜனாதிபதியே காரணம் !!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்றும் ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்துகிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்…

இலங்கை அரசாங்கத்தின் நகர்த்தல் மனு தள்ளுபடி !!

இறையாண்மைப் பத்திரங்கள் மற்றும் அவற்றுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தாததற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கியால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த நகர்த்தல் மனுவை அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் தள்ளுபடி…

6.5 பில். அமெ. டொலர்கள் கையிருப்பு வேண்டும் !!

இலங்கை, மூன்று மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான தொகைக்கு சமமான 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கையிருப்பில்…

எல்லை நிர்ணய அறிக்கை விரைவில் பிரதமரிடம் !!

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 02 நாட்களுக்குள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் குறித்த அறிக்கையை…

சீனா பங்கேற்பது நம்பிக்கை அறிகுறி !!

இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில் பங்கேற்பதில் சீனாவின் சில நகர்வுகளை பார்த்ததாகவும் சீனா பங்கேற்பது நம்பிக்கைக்குரிய அறிகுறி என்றும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெல்லன் தெரிவித்தார். சில கடன் மறுசீரமைப்புகளில் சீனா விரைவாக செல்ல…

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.…

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல் !!

புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது பணப்பை கொள்ளையர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பண்டிகை காலத்தின்போது…

நீராடச் சென்ற மாணவன் பலி !!

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று (09) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு சென்றுள்ளார். இதன்போது,…

பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்பு!!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில்…

நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் –…

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது…

பாவூர்சத்திரத்தில் தாம்பரம்-செங்கோட்டை ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு!!

தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை நேற்று பிரதமர் மோடி வாராந்திர ரெயிலாக தாம்பரத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரெயிலானது வாரம் மும்முறை ரெயிலாக வரும் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்க தொடங்கும். 1904-ம் ஆண்டு…

ஈழத்து சீரடியான் அறக்கட்டளையினால் யாழ் வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள்!!

ஈழத்து சீரடியான் அறக்கட்டளையினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு ரூபா 6 இலட்சம் பெறுமதியான மருந்துப்பொருட்கள் கடந்த வெள்ளிக்கிழமை (07) வழங்கிவைக்கப்பட்டன. வைத்தியசாலைகளில் தற்போது நிலவிவரும் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை…

பிலிப்பைன்ஸில் நெரிசலான குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உயிரிழப்பு!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசல் மாகாணம் டெய்டே நகரில் அடுக்கடுக்கான வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அங்குள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ கண் இமைக்கும் நேரத்தில்…

தெருவோர வியாபாரியின் சமோசா வைரல்!!

உணவு பிரியர்களை கவரும் வகையில் வித விதமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பிட்ட சில உணவு பொருட்கள் வைரலாகி விடும். அந்த வகையில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்…

செல்ஃபி பிரியர்களுக்கென ஓர் உலகம் !!

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ செல்பி ஹோல்‘ என்னும் கேளிக்கை பூங்காவானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு வகையான தீம்களுடன் செல்ஃபி எடுத்து கொள்வதற்கான…

பராமரிப்பாளரின் கையை பிடித்து கொண்டிருக்கும் குட்டி யானையின் வீடியோ!!

யானைக்கும் அதன் பராமரிப்பாளருக்கும் இடையிலான பாசப்பிணைப்பு மிகவும் தூய்மையானது. அந்த வகையில் குட்டி யானை ஒன்று அதன் பராமரிப்பாளரின் கையை பிடித்து இழுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் ப்யூடென்கெபிடன் என்பவர் பகிர்ந்துள்ள…

பொருளாதார ஆய்வறிக்கையில் சீனப் பிரசாரம் !!

24 ஓரே சிஸ்டத்தின் தலையங்கப் பணியாளர்கள், சீனாவில் முதலீடு செய்வதன் நன்மைகள் பற்றிய சட்டபூர்வமான கட்டுரைகளாக மாறுவேடமிட்டு, செல்வாக்கு மிக்க பத்திரிக்கையில் விளம்பரங்களை மீண்டும் மீண்டும் வெளியிடுவதைக் கண்டித்தனர். 24 ஓரே அமைப்பில்…

புதிய டுவிட்டர் பக்கத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அமைச்சரவைப் பட்டியலில் பல மூத்த அமைச்சர்களை…

விசாக்களின் விலைகளை அதிகரிக்கும் அமெரிக்கா..!

சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. குறித்த விலை அதிகரிப்பானது மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற…

முழு அடைப்பு காலத்தில் குழந்தைகளின் மனவளர்ச்சி திறன் பாதிப்பு- டாக்டர்கள் தகவல்!!

கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருந்த போது முழு அடைப்பு போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த முழு அடைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள் சிறைப்பட்டு கிடந்தனர். வெளி பழக்க வழக்கங்கள் இல்லாமல் குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாதது…

ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்டறிய ஈரான் முழுதும் கண்காணிப்பு கமராக்கள்!

ஈரானில் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதைக் கண்காணிக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கமராக்களைப் பொருத்தியுள்ள அதிகாரிகள், மீறுபவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். மேற்காசிய நாடான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் 7 வயதைக் கடந்த…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று அதிகாலை ராணுவப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 2.15 மணியளவில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.…

சீட்டிழுப்பில் 100,000 டொலரைத் தட்டிச் சென்ற அதிஷ்டசாலி…!

அமெரிக்காவில் நபர் ஒருவர் அதிஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் 100,000 அமெரிக்கா டொலர்களை வென்றெடுத்துள்ளார். அமெரிக்காவின் வெர்ஜினியா (Virginia) மாநிலத்தைச் சேர்ந்த ஃபெக்ரூ ஹிர்போ எனப்படுபவர் பிக் 4 (Pick 4) எனப்படும் பிரிவில் 20…

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் விரக்தி- மனைவி தற்கொலை!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாக்லேட் வாங்கி வராததால் கோபமடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹென்னூர் பந்தே அருகே உள்ள ஹொன்னப்பா லே அவுட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சககார நகரில்…

கருவில் இருந்த குழந்தைகளின் மூளையை பாதித்த கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தாயின் நஞ்சுக்கொடிக்குள் ஊடுருவியதன் விளைவாக இரண்டு குழந்தைகள் மூளை பாதிப்புடன் பிறந்ததிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தொடர்பில்…

வரும் மே 2ம் தேதி முதல் புதிய அலுவலக நேரம்- பஞ்சாப் அரசு அறிவிப்பு !!

பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே மாதம் 2ம் தேதி முதல் அலுவலக நேரத்தை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். தற்போது மாநில அரசுத் துறைகளின் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.…

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பசோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 44 பேர்…

மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பசோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கினோ பசோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரு கிராமங்களில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். கவுராக்கோ, தொண்டோபி ஆகிய…