;
Athirady Tamil News

நிலக்கரி ஊழல் வழக்கு: மேற்கு வங்காள சட்ட அமைச்சர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை..!!

மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் மாவட்டம் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- மேலும் 5,379 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 4,417 ஆக இருந்த நிலையில் புதிய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,379 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறி உள்ளது.…

டெல்லியில் பட்டாசுக்கு 2023 ஜனவரி 1-ம் தேதி வரை தடை..!!

டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை தடை விதித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில்…

பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி காட்டிய பிரிட்டன் புதிய பிரதமர்..!!

பிரிட்டனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து போரிஸ் ஜான்சன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தன் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.…

தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு- கோடீஸ்வரர்கள் தெருக்கோடிக்கு வந்த அவலம்..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வெள்ளம்…

ஓணம் கொண்டாட்டத்தையொட்டி 5 நாட்களில் ரூ.324 கோடிக்கு மது விற்பனை..!!

கேரளாவில் மது விற்பனையை அரசின் பெவ்கோ நிறுவனம் நடத்தி வருகிறது. இம்மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். இங்கு 3 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் மது அருந்துவதாக…

பா.ஜனதா பலவீனமாக உள்ள 144 தொகுதிகளில் வெல்வது எப்படி?: அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆலோசனை..!!

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தொடர்ந்து 2-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும்…

பெங்களூருவில் மழை வெள்ள பாதிப்புக்கு காங்கிரஸ் அரசே காரணம்: பசவராஜ் பொம்மை..!!

பெங்களூருவில் கடந்த 4-ந்தேதி இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்புவாசிகள் ரப்பர்…

பெரும்பாலான விபத்து மரணங்களுக்கு அதிக வேகமே காரணம்: மத்திய அரசு அறிக்கை..!!

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், '2020-ம் ஆண்டில் சாலை விபத்துகள்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2020-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில், அதிவேகம் காரணமாக அதிக விபத்துகள் நடந்துள்ளன. அதாவது, 2…

மழை-வெள்ள பாதிப்பு தொடர்பாக நடந்த கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் தூங்கினாரா?: காங்கிரஸ்…

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஹாசன், மண்டியா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை-வெள்ளம் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில்…

டெல்லியில் ரூ.1,200 கோடி போதைப்பொருள் பறிமுதல்- ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது..!!

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், காரில் டெல்லிக்கு போதைப்பொருளை கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வலை விரித்த போலீசார், டெல்லியின் காலிண்டி கஞ்ச் பகுதியில் அவர்களை மடக்கிப்பிடித்தனர். முஸ்தபா ஸ்டானிக்சாய்,…

மதச்சார்பற்ற நாட்டில் அரசுப்பள்ளியில் மத ரீதியிலான உடை அணியலாமா? – ஹிஜாப் வழக்கில்…

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள்…

பெங்களூரு வெள்ள நிவாரண நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு – பசவராஜ் பொம்மை..!!

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆள் உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், பஸ்கள், கார்கள், லாரிகள் நீரில் மூழ்கின. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்…

மரத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கனஒசஹள்ளி அருகே பசபுரா கிராமத்தை சேர்ந்தவர் கங்கப்பா (வயது 50). விவசாயி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்த…

ரூ.50 லட்சம் செலவு செய்தும் சிக்கவில்லை: பெலகாவியில் சிறுத்தையை தேடும் பணி நிறுத்தம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் டவுன் பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி ஒரு சிறுத்தை சுற்றியது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக டவுன் பகுதி பொதுமக்கள் மத்தியில் பீதி உண்டானது. சிறுத்தை நடமாட்டத்தால் கோல்ப்…

உயிர் பிழைத்து விடுவான் என்று கருதி இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த…

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்னும் மூடநம்பிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கர்நாடகத்திலும் தற்போது ஒரு மூடநம்பிக்கை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- பல்லாரி மாவட்டம்…

முஸ்லிம் வீட்டில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு..!!

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்துகள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்திவிட்டு, ஏரி, குளங்களில் கரைத்தனர். இந்த நிலையில்,…

ரோகிங்யா அகதிகள் பிரச்சினை- இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கும் வங்காளதேசம்..!!

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தார். அவரை வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதையடுத்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி வங்களாதேச பிரதமரை…

பெண்கள் கண்ணியத்துடன் பணியாற்ற மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது- மத்திய மந்திரி ஜிதேந்திர…

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது: கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின்…

போதைப் பொருள் கடத்தல் மையமாக குஜராத் மாறிவிட்டது: ராகுல் காந்தி..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத் போதைப் பொருளின் கடத்தலின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து போதை பொருள்கள் கொண்டு…

மணீஷ் சிசோடியாவை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை- குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறது…

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநரின் பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துணை முதல்வர் மணீஷ்…

பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை- பிரதமர் மோடி…

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும்.…

டெல்லி ராஜபாதை கர்த்தவ்யா பாதை என பெயர் மாற்றம்..!!

தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.…

இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் – பிரதமர் மோடி..!!

பிரதம மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்திட வேண்டி மேம்படுத்தப்படும் என ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில்…

தண்டவாளத்தில் டிக்-டாக் செய்த கல்லூரி மாணவர் ரெயில் மோதி படுகாயம்: சமூக வலைதளத்தில் பரவும்…

தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஜி பேட்டையை சேர்ந்தவர் அக்‌ஷய் (வயது 17). இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காஜி பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன்…

மதுரவாயலில் கழுத்தை இறுக்கி முதியவர் கொலை..!!

மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் மின்விளக்கு கம்பம் உள்ளது. இதில் இன்று காலை முதியவர் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் வயரால் இறுக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்..!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 1-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இருப்பார் என்று…

பலத்த போலீஸ் பாதுகாப்புடன்விநாயகர் சிலை ஊர்வலம்..!!

பரமத்திவேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு 5-ம் நாள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். மேலும்…

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் கும்பாபிசேக யாக பூஜைகள்..!!

சேலம் சூரமங்கலம் அருகே சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில் உள்ளது. இதன் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று யாக பூஜைகள் தொடங்கின. விநாயகர்…

ரேசன் அரிசி கடத்தினால் கடை ஊழியர் பணி நீக்கம்..!!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவா ளர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ரேசன் அரிசி கடத்தல் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க…

ரெயில்வே குரூப் டி தேர்வு வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது..!!

இந்திய ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் 'டி' தேர்வு தற்போது 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்வு கடந்த மாதம் நிறைவடைந்ததை அடுத்து…

10 கிலோ கஞ்சா, புகையிலை பறிமுதல்..!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன், ராமன்,கண்ணன், சங்கர் ஆகியோர்…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்புக்கு 1.51 லட்சம் பேர் மனு..!!

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்க 11 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 3,254 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. 1.51 லட்சம் பேர் மனு முகாமில் ஒவ்வொரு வாக்காளரும், சுய விருப்ப அடிப்படையில்…

கிழக்கு முகப்பேரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை..!!

முகப்பேர் கிழக்கு, கோல்டன் ஜார்ஜ் நகர் , பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி ராம்குமார். என்ஜினீயரான இவர் போரூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன்…