;
Athirady Tamil News

கிராம உத்தியோகத்தர் நியமனங்களில் அநீதி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அசோக பிரியந்தவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதியமைச்சரைச் சந்தித்து இவ்வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.

நேர்முகப்பரீட்சை
“கிராம உத்தியோகத்தர் நிமயனத்திற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் நியமனம் பெறும் எண்ணிக்கையினரை விட அதே போன்ற ஒரு மடங்கு தொகையினர் வர்த்தமானி அறிவித்தலுக்கமைய நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி கிண்ணியாவிலிருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனவே, 5 அல்லது 6 பேருக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்.

எனினும் தற்போது இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படுகின்றது. ஏனைய பிரதேச நியமனங்களோடு ஒப்பிடுகையில் கிண்ணியா பிரதேசத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து மீள் பரீசீலனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.