;
Athirady Tamil News

மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

0

அவுஸ்திரேலியா ( Australia) செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் விசாவைப் (student visa) பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய ‘சேமிப்புத் தொகையை’ அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

கடும் நடவடிக்கை
சேமிப்பு கணக்குகள் குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல் சர்வதேச மாணவர் ஒருவர் அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய சேமிப்புக் கணக்கில் அவுஸ்திரேலிய டொலர்கள் 29,710 இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த ஒக்டோபரில், இந்தத் தொகை 21,041 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தப்பட்ட குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.