;
Athirady Tamil News
Daily Archives

14 March 2023

அசாமில் மணமகன் குடிபோதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!!

அசாம் மாநிலத்தின் நல்வாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியை சேர்ந்தவர் பிரசென்ஜித் ஹலோய். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது. அப்போது மணமேடைக்கு மணமகன் குடிபோதையில்…

என்னால் மட்டுமே மூன்றாம் உலகப் போரைத் தடுக்க மட்டுமே முடியும்: பிரசாரத்தில் துணிச்சலாக…

அமெரிக்காவின் அயோவா மாநிலம் டேவன்போர்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசியதாவது:- உலகத்திற்கு இப்போது இருப்பதைவிட ஆபத்தான காலம் இருந்ததில்லை. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,…

வந்தே பாரத் ரெயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர் ஆசியாவில் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988-ம் ஆண்டு முதல் பெண் லோகோ பைலட் சான்றிதழை பெற்றார். அவரது சாதனைகளுக்காக அவர் மாநிலம் மற்றும் தேசிய…

சீனாவுக்கு பதிலடி… முதல் போர்ட்டபிள் ஆளில்லா விமானத்தை அறிமுகம் செய்தது தைவான்!!

தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது. தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர்…

2-வது நாளாக சரிவு: கொரோனா தினசரி பாதிப்பு 402 ஆக குறைந்தது !!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 113 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 500-ஐ தாண்டி இருந்தது. அதாவது ஒரே…

2 வழக்குகளில் இம்ரானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத 2 கைது வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர்…

எனக்கு தெரியாமல் உறவினர்கள் பெயரில் சொத்துகள் மாற்றம்- ZOHO நிறுவன சி.இ.ஒ மீது மனைவி…

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி பிரமிளாவிற்கும் விவாகரத்து ஆனது. இந்நிலையில், ஜோஹோ நிறுவன சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம்…

வெளிநாட்டு பரிசு பொருட்களை வைத்திருப்பது யார்? பாக். அரசு இணையத்தில் பட்டியல் வெளியீடு !!

பாகிஸ்தானில் வெளிநாட்டு பரிசு பொருட்களை வைத்திருக்கும் அரசு உயரதிகாரிகள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் குறித்த பட்டியலை அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் இணையத்தில் பகிரங்கமாக வெளியிட்டது. பாகிஸ்தானில் வெளிநாட்டு…

மகாராஷ்டிரத்தில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் !!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். 17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டம்…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் புடின்!!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி 20 கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்கும்…

கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதி கடிதம்!!

இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம் ஜப்பான், இந்தியா ஆகிய…

போதை மாத்திரைகளுடன் சிவில் என்ஜினியர் ஒருவர் கைது!!

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் என்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் ஒருவரே இவ்வாறு கைது…

நாளைய ரயில் சேவைகள் பற்றிய அறிவிப்பு!!

பயணிகளின் வசதிக்காக நாளை (15) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் 13 அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேரத்தில் இயங்கும் என…

ஏப்ரலில் தேசிய பௌதீகத் திட்டம் !!

தேசிய பௌதீகத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இறுதி ஒப்புதலுக்காக ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். “தேசிய பௌதீக திட்டம்-2048” தயாரிப்பது தொடர்பாக…

பெங்களூரு விமான பணிப்பெண் மரணத்தில் திருப்பம்: காதலனே 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு…

இமாச்சலபிரதேசத்தை சேர்ந்தவர் ககனசக்தி அர்ச்சனா (வயது 28). இவர் விமான பணி பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவரும், சாப்ட்வேர் என்ஜினீயர் ஆதேஷ் என்பவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பெங்களூரு கோரமங்களா 8-வது…

சுதந்திர சதுக்கத்துக்கு செல்ல தடை !!

கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்துக்குள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிக்க இன்று (14) தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், சுதந்திர சதுக்க வளாகத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் பொது நிர்வாக…

அதிக சம்பளம் கோரி இங்கிலாந்து டாக்டர்கள் 3 நாள் ஸ்டிரைக்!!

அதிக ஊதியம் கோரி இங்கிலாந்தில் இளநிலை மருத்துவர்கள் 3 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை மருத்துவர்கள் ஆவர்.…

மகாராஷ்டிராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பலி !!

மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ…

நேபாள அதிபராக ராம் சந்திர பவ்டேல் பதவியேற்பு!!

நேபாளம் நாட்டின் 3வது அதிபராக ராம் சந்திர பவுடேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். நேபாள அதிபராக இருந்த பித்யா தேவி பண்டாரி பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இங்கு ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த வியாழக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. இதில்…

பொது இடங்களில் அநாகரீகமாக ஆடை அணிந்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோஹித் குமார். இவரது மனைவி சப்னா (28). இவர்களுக்கு 4வயது மகன் உள்ளார். இந்நிலையில், சப்னா ஆடை உடுத்துவது தொடர்பாக அவருக்கும் கணவர் மோஹித்துக்கும்…

ஹிஜாப் போராட்டத்தில் கைதானோர் உட்பட ஈரானில் சிறையில் இருக்கும் 82,656 பேருக்கு மன்னிப்பு!!

ஈரானின் குர்திஸ்கான் மாகாணத்தில் கடந்த செப்டம்பரில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறப்பு படை போலீசார் மாஷா அமினி(22) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்தபோது கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில்…

பிடிக்க பிடிக்க தப்பி ஓடும் தேர்தல் !! (கட்டுரை)

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வழங்காத பெரும் முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளும் பொது மக்களும் வழங்கியுள்ளனர். எனவே, நாட்டில் பெரிதாக ஏதோ நடைபெறப் போவதாகவே பலரும்…

வெப்பமயமாவதால் கடல் மட்டம் உயருகிறது- சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஆபத்து!!

கடல் வெப்பநிலையை கணக்கிடுவது 1900ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பல தசாப்தங்களாக இந்த வெப்பம் அதிகரித்து வருகிறது. 1901க்குப் பிறகு அது மேலும் மேலும் அதிகரித்தது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2012ல் கடல் நீர் வெப்பமடைந்தது. சீன…

யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளரும் , அங்கு பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் , நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்…

உலக போரில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு நினைவஞ்சலி!!

லண்டனில் நடந்த காமன்வெல்த் தின விழாவில் உலக போரில் பங்கேற்று உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. லண்டனில் ஆண்டுதோறும் காமன்வெல்த் தின நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள்…

வைரஸ் காய்ச்சலை தடுக்க கொசு மருந்து தெளிக்கும் பணி!!

புதுவையில் கொசு பெருக்கம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க. பொறுப்பாளர் கோபால் கொசு மருந்து தெளிக்கும் பணியை தொகுதி முழுவதும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சஞ்சய்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,812,238 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,812,238 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,605,045 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,580,089 பேர்…

எலும்பு தேய்மானத்துக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

பழத்தை உண்பதால் இரும்புச் சத்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இது உள்ளது. பேரீச்சம் பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம், பொஸ்பரஸ்,…

தனியார் பஸ் சேவை குறித்த அறிவிப்பு !!

நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாளைய தினம் போக்குவரத்துக்குக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது…

முடி திருத்துனருக்கு அதிர்ஷ்டம் மச்சாளுக்கு பேரதிர்ஷ்டம் !!

அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் கிடைத்த அதிர்ஷ்டத்தை அடுத்து தன்னுடைய மனைவியின் தங்கையுடன், முடி திருத்துனர் களவாக பறந்துவிட்ட சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி நகரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திலே இருக்கும் கலஹா…

ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, செவ்வாய்க்கிழமை (14) வீழ்ச்சியடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 319 ரூபாய் 84 சதமாகவும் விற்பனை பெறுமதி 335 ரூபா…

ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்கள் – மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன்…

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை…

சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல்!

சீன அதிபர் ஷி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை அடுத்த வாரம் நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 3வது முறையாக சீன அதிபராக ஜின்பிங் பதவி ஏற்றார்; இந்நிலையில் புதினுடனான இந்த சந்திப்பு ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை…