;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

சாவிலும் இணை பிரியவில்லை: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 11 வயது இரட்டையர்கள் உயிரிழப்பு

ஜம்மு: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், பிரதி தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவர், நியமிக்கப்பட்டுள்ளனர். தவிசாளராக எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளராகவும் எம்.ஐ.எம்.ஜெஸீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின்…

மின்னல் தாக்கி வயலில் நின்றவர் பலி

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவின் விஜயபுர பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர். இவ் துயர சம்பவம் நேற்று (14 ) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் விஜயபுர, தமனேவெல பகுதியைச் சேர்ந்த 47…

அம்மோனியா உரத்தை யூரியா என விற்பனை; சிக்கிய 12 பேர்

அம்மோனியா உரத்தை யூரியா உரம் என்று கூறி,மோசடி செய்ததோடு அதிக விலைக்கு விற்பனை செய்ய உதவிய 12 சந்தேக நபர்களை பொலன்னறுவை குற்றத் தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலன்னறுவை சிறிபுர நகரில் விவசாய உரங்கள் மற்றும் விவசாயப்…

விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் 13,000 லீட்டர் எரிபொருள் மாயம்

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்த பெருமளவு எரிபொருள் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (14)…

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை: சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவிப்பு

பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவும், பலோசிஸ்தான் இனி பாகிஸ்தான் இல்லை எனவும் பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலோச் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும்…

நிறைவேற்று அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி மிரட்டுகிறார்

தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின்…

யாழில். 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி 32 வயதுடைய நபர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து…

நினைவாயுதம் கண்காட்சி யாழ். பல்கலையில் ஆரம்பம்

நினைவாயுதம் என்கிற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுகள் கண்காட்சி தமிழினப்படுகொலை வரலாறாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பிரதான வளாகத்தில் (கைலாசபதி அரங்கு அருகே) நேற்று 14.05.2025 புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.…

சிப்ஸ் தராததால் ஆத்திரம் – 14 வயது சிறுவனின் உயிரை பறித்த 6ஆம் வகுப்பு மாணவன்

சிப்ஸ் தராததால், 6ஆம் வகுப்பு மாணவன் 14 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிப்ஸ் தகராறால் பறிபோன உயிர் கர்நாடக மாநிலம், ஹூப்ளியின் குருசித்தேஷ்வர் நகரில், 14 வயதான சேத்தன் ரக்கசாகி மற்றும் 12 வயதான சாய்…

சிங்கப்பூர் விமானத்தில் பணிப்பெண் பாலியல் துன்புறுத்தல்: இந்தியருக்குச் சிறை!

பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 தேதியன்று சிங்கப்பூர் எல்லைன்ஸ்…

இந்திய ராணுவ வீரரை 20 நாட்களுக்கு பிறகு ஒப்படைத்த பாகிஸ்தான்

தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய வீரரை பாகிஸ்தான் திரும்ப ஒப்படைத்துள்ளது. கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம்…

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முறையிடுவதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும்…

வெசாக் நிகழ்வை கண்டுகளிக்கச் சென்ற காதலர்களுக்கு நேர்ந்த துயரம்

மாத்தறை - தங்காலை கரையோர வீதியில் நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்ற விபத்தில் காதலர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த பஸ்ஸை கடந்துச் செல்ல முயன்ற போது, மோட்டார்…

நாட்டில் தீவிரமாக பரவும் ஆபத்தான நோய் ; வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் இந்த காலகட்டத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள்…

வீதியை விட்டு வழுக்கிச் சென்ற பேருந்து

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உதுவான்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு வழுக்கிச் சென்றுள்ளது. இந்த விபத்து இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும்…

காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலி!

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று (மே 14) அதிகாலை நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் 60…

கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி

கத்தார் அளிக்கும் பல கோடி மதிப்பிலான போயிங் விமானத்தை, தான் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பது முட்டாள்தனம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிந்துகொண்டுள்ளார். அமெரிக்க அரசோ அல்லது அதிபருக்கோ, வெளிநாடுகளிலிருந்து இதுவரைக் கிடைத்த…

கணவர் இறந்த பின்னர் ஏஐ சாட்பாட்டை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்

AI Chatbot என்பது, பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, தங்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் பதில்களை வழங்குகிறது. இந்த Chatbot களுக்கு எந்த உணர்வும் கிடையாது. ஆனால் தனிமையில் வாடும் மனிதர்களில் சிலர், இந்த சாட்பாட்டுடன் உரையாடும் போது…

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு குறித்து உலக வா்த்தக…

அரசாங்கம் கனவு கண்டது போல் அமையவில்லை

மொஹமட் பாதுஷா ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை விட சற்று மாறுபட்டதொரு எண்ணப்பாட்டை உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக மக்கள் உட்கிடையாக வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிகின்றது. அந்த வகையில். தமிழ்,…

பிரித்தானியாவில் அசாதாரண வறண்ட வசந்த காலநிலை: நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கவலை!

பிரித்தானியாவில் நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற புதிய கவலை தலைதூக்கியுள்ளது. நீர் கட்டுப்பாடுகள் பிரித்தானியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளுக்கு நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற கவலை தலைதூக்கியுள்ளது.…

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு கெரவலப்பிட்டி நிரப்பு வளாகத்தில் மேன்பவர் ஊழியர்கள் குழுவினர் முன்வைத்த கோரிக்கைளால் இன்று (14) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் லிட்ரோ எரிவாயுவை நிரப்புவதிலோ அல்லது…

மட்டக்களப்பு பயங்கரம்; சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது கோடூர தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் என்பவரே வழி மறிக்கப்பட்டு இனந்தெரியாதோரால்…

பிரித்தானிய பிரதமரின் சொத்துக்களுக்கு தீ வைத்த வழக்கு) 21 வயது இளைஞர் கைது!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்களில் தீ வைத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் கைது பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்களில் தீ வைத்தது உட்பட, தொடர்ந்து சந்தேகத்திற்குரிய தீ வைத்த சம்பவங்கள் தொடர்பாக 21…

நீண்ட தூர பேருந்து சேவை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நீண்ட தூர பேருந்து சேவைகளுக்காக பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 6 மணி நேரத்திற்கும் மேலான எந்தவொரு நீண்ட தூர பயணத்திற்கும், 2 வெவ்வேறு பேருந்து சாலைகளின்…

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக…

நுவரெலியாவில் மற்றுமொரு விபத்து ; 11 பேர் படுகாயம்

நுவரெலியா, இறம்பொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது. இறம்பொடை, கெரண்டிஎல்ல பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் , பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர் நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை…

காசாவில் தற்போது கடும் பஞ்சம்; மக்கள் உயிரிழக்கும் அபாயம்

இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனால், காசாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காசா…

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் நிறுத்தம் தொடா்பாக துருக்கியில்…

ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது. கடந்த 12ஆம் மற்றும்…

யாழில் இருந்து தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் ஊர்தி பவனி ஆரம்பம்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை ஊர்திப் பவனியொன்று ஆரம்பமாகியது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த…

உ.பி.யில் காப்பீடு பெயரில் ரூ.200 கோடி மோசடி: காப்பீட்டு தொகை பெறுவதற்காக 4 பேர் கொலை

புதுடெல்லி: உத்தரபிரதேசம் சம்பலில் பல்வேறு காப்பீடுகளின் பெயரில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. காப்பீட்டுத் தொகை பெறுவதற்காக 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். உ.பி.யின் சம்பலில் கடந்த வருடம்…