;
Athirady Tamil News

சுகாதாரத்திற்கு ஆபத்து : யாழ்ப்பாணத்தில் வளர்ந்துவரும் கழிவு நெருக்கடி!! (கட்டுரை)

0

தற்பொழுது கழிவுகளைக் கொட்டும் நிலமாகப் பயன்படுத்தப்படும் கீரிமலை, காங்கேசன்துறை கற்குவாரி

தீபகற்பமான நாட்டின் வடக்கில் இயற்கை வளங்களையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் யாழ்.மாவட்டம் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால் அண்மைய ஆண்டுகளில் அந்தப் பிரதேசம் புதிய நெருக்கடியொன்றைச் சந்தித்து வருகிறது. அதற்கான காரணத்தினைக் கண்டறிவதற்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், முறையான முகாமைத்துவமற்ற மருத்துவக்கழிவுகளினால் மாவட்டம் முழுவதிலுமுள்ள குடியிருப்புவாசிகளுக்கு ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் ஆபத்தான பின்விளைகள் ஆகியன வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கீரிமலைப் பிரதேசம் நீண்ட வரலாறு கொண்ட கிராமங்களையும் கண்கவர் பசுமை நிலப்பகுதிகளையும் கொண்ட பரந்துவிரிந்த பகுதியாகும். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இந்நிலப்பகுதி, 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நாட்டின் முதலாவது சீமெந்து தொழிற்சாலையை கொண்டுள்ளதால் தொழிற்சாலைகளின் முன்னோடிப் பகுதி என்ற சிறப்பையும் பெற்றுத்திகழ்கிறது.

இந்தத்தொழிற்சாலை தனது உற்பத்தியை நிறுத்தி நீண்டகாலமாகின்ற பின்னரும் முன்பு நிறுவப்பட்ட இரும்பிலான இயந்திரக் கட்டமைப்பின் எச்சங்கள் கடந்த தசாப்த காலத்தின் நினைவுகளை மீட்டியவாறு உள்ளது.

திருமதி. துஷ்யந்தன், 34 வயது நிறம்பிய ஒரு குழந்தையின் தாய், கீரிமலையில், உள்ள நல்லிணக்கபுரத்தில் அமைந்துள்ள கைவிடப்பட்ட சுண்ணாம்புக்கல் கல்குவாரிக்கு மிகஅருகில் வசித்துவருபவர். திருமதி.துஷ்யந்தனைப் பொறுத்தவரைரூபவ் அந்தப் பிரதேசத்தில்; காணப்படுகின்ற நிலைமைகளால் சொல்லமுடியாத துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்.

குறிப்பாக அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கற்குவாரிகள், குடியிருப்பாளர்களின் திண்மக்கழிவுகளுடன் இரகசியமாக மருத்துவக் கழிவுகளையும் கலந்து கொட்டும் இடமாக மாறியுள்ளதால் சுகாதார நெருக்கடிகள் உருவாக்கி திருமதி.துஷ்யந்தன் குடும்பத்தினரைப் பலிகடாவாக்கியுள்ளது.

திருமதி. துஷ்யந்தனும் அவரது மகனும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் கல்குவாரியின் பிரதான வாயில் அருகே அமைந்துள்ள தமது வீட்டின் வாயிலில் நிற்கின்றனர்.

“எனது ஐந்து வயது நிரம்பிய மகன் ஒன்றன் பின் ஒன்றாக நோய்களினால் அவதிப்படுகிறார். இப்பொழுது உடல்வலி அதிகரித்துள்ளதோடு கடுமையான இருமலாலும் கஷ்டப்படுகின்றார். சென்றவாரம் நாங்கள் அவரை வைத்தியசாலைக்கு கூட்டிப் போயிருந்தோம். அங்கு அவர் சில நாட்கள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது” என்று தனது அன்றாட போராட்டங்களை உணர்ச்சிபூர்வமாக மீட்டெடுக்கிறார்.

“நாங்கள் இந்தப் பிரதேசத்தில் குடியேறி ஐந்து வருடங்களாகின்றன. கடந்த மூண்டு அல்லது நான்கு வருடங்களாக, கல்குவாரிக்கு நெருக்கமாக அமைந்துள்ள எமது வீட்டின் அருகே தான் அவர்கள் திண்மக் கழிவுகளைக் கொட்டுகின்றனர். அன்றிலிருந்து எமது வாழ்க்கை வைத்தியசாலையும் வீடுமாக இருக்கும் நிலைமை தொடர்கதையாக மாறியுள்ளது” என்று சுட்டிக்காட்டுகின்றார்.

திருமதி. துஷ்யந்தன் ‘நல்லிணக்க மாதிரி கிராமத்தில்’ வசித்து வருகிறார். இப்பிரதேசம் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் செயன்முறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இங்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 2014ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன. ஆனால் 2019இல் இந்த குடியேற்ற சமூகத்தின் வாழ்க்கையே மாறிவிட்டது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள ஆழமான குவாரிகளை கழிவுகளை இட்டுநிரப்பும் நோக்குடன்ரூபவ் குடாநாட்டில் உள்ள குடியிருப்பாளர்களின் திண்மக்கழிவுகளைச் சேகரித்துக் கொட்டுகின்றனர். இத்திட்டத்திற்கு அமைவாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் கேடுவிளைக்காத அழிவடையக் கூடிய கழிவுகளை மட்டுமே இங்கு கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனினும், பின்னாளில் அனைத்துவிதமான கழிவுகளும் நல்லிணக்கபுர கிராம மக்களின் ஒப்புதலின்றி கொட்டப்படுவதால் அது அம்மக்களின் அன்றாட வாழ்வையே திணறடிக்கச் செய்துள்ளது.

தான் செய்யாத குற்றத்திற்காக இவ்வாறான நெருக்கடிக்குள் சிக்கியிருப்பது திருமதி.துஷ்யந்தனின் குடும்பம் மட்டும் அல்ல. அவரது அண்டை வீட்டுக்காரரான 63வயது இராசைய்யா புஷ்பராணியும் தான். அவர்ரூபவ் தனது வீட்டுக்கு அருகில் எத்தகைய கழிவுகள்; கொட்டப்படுகின்றன என்பதை அறியாதவராய் அன்றாடவாழ்வை மாசடைந்த இப்பிரதேசத்தினுள் கழித்து வருகிறார்.

“கழிவுகளைச் சுமந்தவாறு வரும் உழவு இயந்திரங்களும், வாகனங்களும்; அனைத்துவிதமான குப்பைகளையும் கழிவுப்பொருட்களையும் இந்தக் குவாரியில் கொட்டிச் செல்கின்றன.

துர்நாற்றம் தாங்கமுடியாமல் நான் எனது பேரப்பிள்ளைகளுடன் கிராமத்திற்கு வெளியிலேயே பெருமளவு நேரத்தினை கழிக்கிறோம். நாங்கள் துர்நாற்றம் குறைவடைந்ததன் பின்னர் தான் வீட்டிற்குத் திரும்புவோம். இதுவே எமது அன்றாட வாழ்க்கையாக மாறியுள்ளது” என்று பெருமூச்சுவிட்டவாறு தெரிவித்தார்.

இராசைய்யா புஷ்பராணி அங்கு கொட்டப்படும் கழிவுகள் பற்றி அறிந்திருக்காதபோதும் இக்கிராம மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் நிறுவனங்கள் அவர்களின் துயரத்திற்கும் காரணமாக இருக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் ஐந்து வைத்தியசாலைகளில் மட்டும் தான் நோய்த்தொற்றை ஏற்படுத்துவல்ல ரூபவ் சூழலுக்கு அச்சுறுத்தலான மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சைக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைரூபவ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைரூபவ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைரூபவ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை ஆகியனவே அந்த ஐந்து வைத்தியசாலைகளாக இருக்கின்றன.

தகவல் அறியும் உரிமைச் சடடத்தின் மூலமாக மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் மூன்று வைத்தியசாலைகளில் மாதமொன்றுக்கு சராசரியாக 23ஆயிரம் கிலோகிராம் மருத்துவக்கழிவுகள் வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1. யாழ்போதனா வைத்தியசாலையிலிருந்து 18ஆயிரம் கிலோகிராமுக்கு அதிகமாகவும்

2. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலிருந்து 3,500 கிலோகிராமுக்கு அதிகமாகவும்

3. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார் 2ஆயிரம் கிலோகிராம் வகையிலும் வெளியேற்றப்படுகின்றன.

பொதிசெய்யப்பட்ட மருத்துவ தொற்றுக்கழிவுகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு வாகனத்திலிருந்து இறக்கப்படுகின்றன

வைத்தியசாலைக் கழிவுகள் எட்டுவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: தொற்றை ஏற்படுத்துபவை, வியாதிகளுடன் தொடர்புடையவைரூபவ் கூரான, இரசாயன, மருத்துவ, நுண்ணுயிரி விஷங்கள், கதிரியக்க கழிவுகள் மற்றும் தீங்கற்ற கழிவுகள் என்பன அவையாகும்.

யாழ்ப்பாணம் மாநகரசபை தொற்றாத மற்றும் சூழலுக்கு தீங்கற்ற கழிவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றது. ஏனையவை உலக சுகாதார வழிகாட்டல் வழிமுறைகளைப் பின்பற்றியும் இலங்கையின் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வழிகாட்டுதல்ளையும் பின்பற்றி எரியூட்டப்பட வேண்டும்.

அத்துடன், ஊறுவிளைவிக்கக்கூடிய கழிவு 1000-1200 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் எரியூட்டப்பட வேண்டும் என்பதுடன் கூரிய கழிவு (பயன்படுத்தப்பட்ட ஊசிகள் அவற்றை ஏற்றும் சிறிஞ்சுகள் உட்படவை) மெற்றாமைஸர் என்னும் இயந்திரத்தைப் பயன்படுத்தி அவை துகள்களாக்கப்பட வேண்டும் என்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த வைத்தியசாலைகளுக்குச் சென்றதன் பின்னர், யாழ்ப்பாணத்தின் பெருகிவரும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதையும் தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யக்கூடிய விதத்தில் காணப்படவில்லை என்பதையும் நேரடியாகவே உறுதிப்படுத்த முடிந்தது.

யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பளை வைத்தியசாலை வளாகத்தில் இரவுபகலாக இயங்கும் மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் இயந்திரம்

இயந்திரத்தின் செயற்பாடின்மைக்கான கணித சமன்பாடு மிகவும் எளிமையானது. யாழ் மாவட்டம் முழுவதிலும்ரூபவ் ஒரு மணித்தியாலத்திற்கு 50 கிலோ கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஒரே ஒரு எரியூட்டி மட்டுமே தற்போது உள்ளது.

ஏனைய எரியூட்டிகளின் செயற்பாடுகள் சுற்றுச்சூழல் கரிசனைகள் காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன அல்லது பழுதடைந்த நிலையில் உள்ளன.

தற்போதைய நெருக்கடியின் கீழ் தெல்லிப்பளை வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு எரியூட்டியானது யாழ்.போதனா வைத்தியசாலையின் கழிவுகளை எரியூட்டுவதற்காக மட்டுமே நாளொன்றுக்கு குறைந்தது 20 மணிநேரம் செயற்பட வேண்டியுள்ளது. ஆயினும்கூட, இது நாளொன்றுக்கு 10முதல் 12 மணிநேரம் மட்டுமே செயற்படுகிறது. இயந்திரம் கணிசமான இடைவெளியில் குளிர்ச்சியடைய வைத்தே இயக்கப்பட வேண்டியிருப்பதால் ஆயிரக்கணக்கான கிலோகிராம் அபாயகரமான கழிவுகள் வேறு போக்கிடமின்றி, தேக்கமடையும் நிலையில் உள்ளன.

முகாமைத்துவ வசதிகள் குறைபாட்டினால் வைத்தியசாலைகள் மருத்துவக் கழிவை சேகரிக்கும் நிலையமாக மாறியுள்ளன.

கூரிய கழிவுகளை உடைத்து சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் மெற்றாமைஸர் தற்போது செயலிழந்துள்ளது. இதனால், மாற்று வழிகள் எதுவும் இல்லாததால், இந்தக் ‘கூரிய’ பொருட்களையும் ஏனைய கழிவுகளுடன் எரியூட்டுகின்றனர்.

இவ்விதமான ‘தற்காலிக’ முயற்சியானதுரூபவ் கழிவகற்றல் வழிகாட்டுதல்களை மீறுவது மட்டுமல்லாமல்ரூபவ் எரிப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலையையும் பாதிக்கிறது. இதன் விளைவாக செயற்பாட்டு வெப்பநிலையாது 200 பாகை செல்சியஸுக்கு மேல் குறைகிறது.

யாழ்ப்பாணத்தின் உள்ள ஒரேயொரு எரியூட்டியானது தற்போது கழிவுகளை திறம்பட எரிக்கும் திறனை இழந்துள்ளது. குறித்த பகுதிக்கு விஜயம் செய்த போது, கூரிய பொருட்கள் உட்பட பகுதியளவு எரிந்த மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுவதை அவதானிக்க முடிந்தது.

அதேநேரம், பகுதியளவில் எரிந்த கழிவுகள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவை, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை அறிய யாழ்.போதனா வைத்தியசாலையின் பொதுச்சுகாதாரப் பிரிவினை அணுகியபோது, அவர்கள், யாழ்.நகரிலிருந்து 19 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அரியாலைப் பகுதியில் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள வெற்றுக்காணியில் எரிந்த கழிவுகள் அனைத்தையும் கொட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறினர்.

இருப்பினும், குறித்த இடத்திற்குச் சென்றபோது, கழிவுகள் கொட்டப்படுவதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அதற்கான பதிலைத்தேடி, யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோரியபோது, தகவல் அதிகாரியான வைத்தியர் எஸ். யமுனானந்தா, “அதைப் பற்றி உறுதியாகப் தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.

ஆனால் கழிவுகளை முறையற்ற விதத்தில் அகற்றும் குற்றச்சாட்டுக்களை யாழ்.போதனா வைத்தியசாலை மட்டும் எதிர்கொள்ளவில்லை. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையும் இரவு நேரத்தில் தமது வளாகத்தினுள் மருத்துவக்கழிவுகளை எரியூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் வளாகத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், சுவாசிக்க சிரமப்படுவதாக அதற்கு அருகில் வசிக்கும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததோடு, மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதை தாங்கள் நேரில் பார்த்ததாகவும் கூறியுள்ளனர். எனினும்ரூபவ் வைத்திசயாலைக்கு பொறுப்பான வைத்திய அத்தியட்சகர் அக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

இவ்வாறிருக்கையில், நல்லிணக்கபுரம் கிராம மக்களின் நிலைமைகள் தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சஜீவன் கரிசனைகளை வெளியிட்டுள்ளார்.

மருத்துவக் கழிவுகள் தரம் பிரிக்கப்படாமல், நல்லிணக்கபுரத்திற்கு அருகில் உள்ள குவாரியில் இரகசியமாக கொட்டப்படுவதாக தெரிவித்த அவர் ஆரம்பத்தில் நிலத்தை நிரப்புவதற்கு உறுதியளித்தவாறு கழிவுகள் தரம்பிரிக்கப்பட்டு கொட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், நேரடியாக குவாரிப்பகுதிக்கு வருகைதந்த அவர்ரூபவ் எஞ்சியிருக்கும் மருத்துவக் கழிவுகள் குவாரியில் காணப்படும் குப்பை மலைக்களுக்குள் சிரிஞ்சுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவக் குழாய்கள் மற்றும் கண்ணாடி குப்பிகள் உள்ளிட்ட அறுவை சிகிச்சை கழிவுகள் ஆகியவற்றை அடையாளப்படுத்தினார்.

வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினரான சண்முகலிங்கம் சஜீவன், குவாரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அடையாளப்படுத்தியபோது

மேலும், செயலற்ற தன்மையால் அந்தத்தளம் நோய் பரவும் இடமாக மாறிவிட்டதாக சஜீவன் கவலையை வெளியிட்டதோடு, “இந்த குவாரி நீண்ட காலமாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இராணுவத்தினரின் கழிவுகள் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கழிவுகள் முறையற்ற வகையில், இங்கும் அதேபோன்று அருகிலுள்ள ஏனைய கிராமங்களிலும் கொட்டப்படுகின்றன” என்றும் குற்றம் சாட்டினார்.

“தெல்லிப்பளை வைத்தியசாலையின் கழிவுகள்; இரகசியமான முறையில் இங்கு கொட்டப்படுவதோடு, தனியார் மருத்துவமனைகளும் தமது மருத்துவக் கழிவுகளும் இரகசியமாக கொட்டப்படுவதற்கு ஒப்பந்தங்களைச் செய்துள்ளனரா? என்ற சந்தேகமும் எமக்குள்ளது” என்றார்.

இக்கருத்தினை வலுப்படுத்தும் வகையில்ரூபவ் கடந்த ஐந்து வருடங்களாக இந்த நெருக்கடிக்குள் வாழ்ந்து வரும் திருமதி துஷியந்தன், “சமீபத்தில் எனது சகோதரி என்னைச் சந்திக்க வந்தபோது, குவாரிக்குள் வாகனம் செல்லும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க அவள் அதன் நுழைவாயிலுக்குச் சென்றாள், அவள் காலில் ஒரு மருந்தேற்றும் ஊசி குத்தியது” என்றார்.

ஆகவே மருத்துவக்கழிவுகளின் ஆபத்துகள் இப்போது குவாரியின் நுழைவாயிலை அண்மித்துள்ளன என்பது உறுதியாகின்றது.

உள்ளுர்வாசிகளின் கூற்றுப்படி, தீங்கற்றது என்று தரம் பிரிக்கப்பட்ட கழிவுகள் மட்டும் கொட்டப்படும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட குவாரி காலப்போக்கில், தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படும் இடமாக மாறியுள்ளதோடு மட்டுமன்றி ஆபத்தான மருத்துவக் கழிவுகள் மற்றும் பகுதியளவில் எரிந்த கூர்மையான கழிவுகளும் கொண்டப்படும் பகுதியாகியுள்ளது. இதனை பெயர் குறிப்பிடவிரும்பாத நபர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் அவர்ரூபவ் மருத்துவக் கழிவுகள் கறுப்பு பொலித்தீன் பைகளில் கொண்டுவரப்பட்டு ஏனைய கழிவுகளுடன் கலக்கப்படுவதாக தெரிவித்தார். வைத்தியசாலைகளில் பகுதியளவு எரிந்த மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளின் சாம்பலும் ஆள்அரவமற்ற மாலை நேரத்தில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இப்பகுதியின் ஆளுகைக்கு தலைதாங்கும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரான சோமசுந்தரம் சுகிர்தனிடத்தில் இந்த மோசமான நிலைமை குறித்து கவனத்திற்கு கொண்டு சென்றபோதுரூபவ் “கல்குவாரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைக் கழிவுகளை நாம் சேகரிப்பதே இல்லை” என்று கூறினார்.

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் நிர்வாகத்தினரும் தவிசாளருடைய கருத்தினை வலுப்படுத்தும் வகையில் கழிவுகளை தாம் அங்கு அனுப்புவதில்லை என்றனர்.

எவ்வாறாயினும், இந்தவிடயத்தில் நீளும் அக்கறையின்மை காரணமாக, கிராமவாசிகள், விடயங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

“எங்கள் பகுதியைச் சுற்றி கழிவுகளைக் கொட்டவேண்டாம் என்று நாம் பலமுறை அவர்களிடம் கோரினோம். கழிவுகளை ஏற்றிவந்த பாரஊர்திகளை மறித்து இடத்தைவிட்டு வெளியேறுமாறும் கூறிப் பார்த்தோம், ஆனாலும் அவர்கள் இரகசியமாக வைத்தியசாலைக் கழிவு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்தும் கொட்டி வருகின்றனர்” என்றார் 36வயதுடைய கிராமவாசியான தனபாலசிங்கம் கஸ்தூரி.

“நுளம்பு, இளையான் பெருக்கத்திற்கான தளமாக இருக்கும் குறித்த கழிவுத் தொகுதிக்கு அவர்கள் எப்போதாவது தீ மூட்டுவார்கள். எமக்கு எமது பிள்ளைகளைக்காப்பது கடினமான காரியமாகிறது” என்றும் கிராமவாசிகள் தாம் முகங்கொடுக்கும் சவால்களை வெளியிட்டனர்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரும் சமூக மருத்துவத்துறை பேராசிரியருமான ராஜேந்திர சுரேந்திரகுமாரன்

“நம் சமூகத்தில், கழிவுகளை எரிப்பது என்பது ஒருசாதாரணத் தீர்வாக தவறாகக் கருதப்பட்டுரூபவ் அதுவொரு பழக்கமாகிவிட்டது. ஆனால் ஆபத்தான மருத்துவக் கழிவுகளை எரிப்பதும்ரூபவ் பகுதியளவு எரிந்த கழிவுகளை கொட்டுவதும் மனிதர்களுக்கும் உள்ளுர் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது” என்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரும் சமூக மருத்துவத்துறை பேராசிரியருமான ராஜேந்திர சுரேந்திரகுமாரன் கூறுகிறார்.

“மருத்துவக் கழிவுகளை சரியான வெப்பநிலையில் எரிக்காதபோதுரூபவ் அதன் நச்சுக் கனிமங்களான டையொக்சின் மற்றும் பியூரன் போன்றவை காற்றில் கலக்கின்றன. அவை நீர் மற்றும் உணவுச் சங்கிலியில் தாமாகவே உட்புகுந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பகுதியளவு எரிந்த கனிமங்களின் எச்சம் நம் உடலுக்குள் நுழைவதன் மூலம் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள், சிறுநீரகம் மற்றும் சரும நோய்கள் ஆகியன ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாகவும் வைத்தியர் சுரேந்திரன் எச்சரித்தார். உலக சுகாதார அமைப்பின் சர்வதேச புற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மருத்துவ கழிவுகளின் வெளியீடுகள் புற்றுநோய்க்கான சாத்தியமான காரணியாக வகைப்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய, மாகாண மற்றும் மாவட்ட சுகாதார திணைக்களங்கள் அவற்றுடன் மாகாண சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்காத நிலையில், பயனுள்ள தீர்வுகளுக்கான கோரிக்கைகளை துறைசார்ந்தவர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் (திட்டமிடல் பிரிவு) செவ்வராசா ரவீந்திரன்

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கழிவுகளை அகற்றும் முகாமைத்துவம் முறையான தரப்படுத்தல் போன்றவற்றுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அனைத்துத் தரவுகளையும் உன்னிப்பாகப் பேணுவது முக்கியம்” என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் (திட்டமிடல் பிரிவு) செவ்வராசா ரவீந்திரன்.

“தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொள்கையில், மருத்துவ கழிவுகளை அகற்றுவதில் உள்ள நெருக்கடியை சமாளிக்க, எரியூட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இருப்பினும், அவை குடியிருப்பு பகுதியிலிருந்து குறைந்தது 100 மீற்றர் தொலைவில் நிறுவப்பட வேண்டும். இந்த எரியூட்டிகளின் புகைபோக்கிகள் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப திறனைப் பெற்றிருக்க வேண்டும்”என்று அவர் குறிப்பிடுகின்றார்.

தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள செயற்றிறன் குன்றிய எரியூட்டிக் கட்டமைப்பு தெல்லிப்பளை வைத்தியசாலையின் எரியூட்டும் இயந்திர வசதி

எவ்வாறாயினும், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் அரச கட்டமைப்புக்குரிய நிதி ஆதாரங்கள் போதாமையால் பல பயனுள்ள எரியூட்டி வசதிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கனவாகவே இருப்பதாக ரவீந்திரன் கூறுகின்றார்.

அவரது பரிந்துரைகளின்படி, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க ஆகியோர் யாழ். மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை மீள் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.

தற்போதைய நிலையில் நல்லிணக்கபுர கிராம மக்களைக் கடந்து யாழ்.மாவட்டம் முழுவதும் ஆபத்துக்கள் நிறைந்தே இருக்கும் நிலைமை நீடிக்கின்றது. எனினும் நிரந்தரமான தீர்வுக்கான மக்களின் காத்திருப்பு நீளுகின்றது.

ஆர்.ராம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.