;
Athirady Tamil News

உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய யூடியூப்

0

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (18) திடீரென முடங்கிய நிலையில் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை பார்வையிடுவதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் முறைப்பாடு அளித்துள்ளனர்.

குறிப்பாக வட்ஸ்அப் போன்ற தளங்களில் வீடியோ லிங்குகள் சரியாக தொழிற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

கடந்த சில மணிநேரங்களாகக் காணொளிகளைப் பார்ப்பதிலும், கணக்குகளை அணுகுவதிலும் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் எதிர்கொண்ட “சம்திங் வென்ட் ராங்” (Something went wrong) சிக்கல்கள் தற்போது நீக்கப்பட்டு, தளம் சீராக இயங்கத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.