;
Athirady Tamil News

ரணில் மனைவிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க , இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த , 2023ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.