;
Athirady Tamil News

பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம் எங்கிருந்து? எங்கு?

0

பல்வகைப்பட்ட காணப்படும் உலக நாடுகள் அனைத்தையும் தமது தேவைக் கேற்றவாறு எந்த நாட்டை அணி சேர்த்து, எந்த நாட்டை ஓரங்கட்டி, எந்த நாட்டைக் கையாண்டு, எந்த நாட்டை பயன்படுத்தி தத்தமக்கான நலன்களையும், வெற்றிகளையும் ஈட்டுவதற்காக நாடுகளை நாடுகளால் கையாள்கின்ற நடவடிக்கைகள்தான் பன்னாட்ட அரசியல் அல்லது சர்வதேச அரசியல் (International Politics) என அழைக்கப்படுகிறது.

இவ் சர்வதேச அரசியலில் வெற்றிக்கனியை பறிக்க கையாளப்படுகின்ற அனைத்துவகை உத்திகளே ராஜதந்திரமாகும். இங்கே சர்வதேச உறவில் நல்லதும், கெட்டதும், எதிரும் புதிருமான, நட்பும், பகையும், நொதுமலும் கொண்ட, சூதும் வாதும் மிக்க, வஞ்சகமும், சூழ்ச்சியும், பொறாமையும், ஏற்றத் தாழ்வும், ஆதிக்க அகங்காரமும் மிக்க ஒரு வினோதமான கலவையை கொண்ட பன்னாடுகளுக்குள் தத்தம் நலன்களை அடைவதற்காக முட்டி மோதி தமக்கான பங்கை பறித்துக்கொள்கின்ற அரசியல் ஆடுகளத்தில் பன்நாடுகளுடனான தொடர்பாடல்களே சர்வதேச உறவுகளாகும்(Internationa relations). அந்த ஆடுகளத்தில் சாகச வித்தை காட்ட வல்லவர்கள் ராஜதந்திர வெற்றி வாகை சூடுகின்றனர்.

இஸ்ரவேலுக்கு சர்வதேசம் என்பது முதலாவது அர்த்தத்தில் அமெரிக்காதான். அமெரிக்காவின் நட்பு நாடுகளாக நேட்டோ நாடுகள் உள்ளதால் அமெரிக்காவின் வழியில் நேட்டோ நாடுகளும் இஸ்ரேலின் நட்பு அணிக்குள் வந்து விடுகின்றன. அமெரிக்கா உலக அரங்கில் ஆதிக்கம் வகிக்கவல்ல ஏகப் பெருவல்லரசு என்ற வகையில் இஸ்ரேல் அமெரிக்கா என்ற பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு போல உலகின் இஸ்லாமிய நாடுகளை அணுகுகிறது.

பலஸ்தீனத்தை கொத்திக் குதறுகிறது. பாலஸ்தீன-இஸ்ரேல் யுத்தத்தினை ஒரு தத்துவார்த்த கண்ணோட்டத்திலும் அதே நேரத்தில் வரலாற்று கண்ணோட்டத்திலும் மறுபுறத்தை உலகளாவிய ஆளுகை மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும் புவிசார் அரசியலின் ஒரு பகுதியாகவும் உலகளாவிய வர்த்தகப் போட்டியின் கேந்திர தானம் என்ற அடிப்படையிலும் அலசி ஆராய வேண்டும்.

தீர்க்கதரிசி மோசே அவர்களினால் எழுதப்பட்ட யூதேய தத்துவ நூலான தோரா (The Torah Scroll) யூத மக்களுக்காக ஆசீர்வதிக்கப்பட்ட பூமிதான் இஸ்ரேல் என்கிறது. எனவே யூதர்கள் தங்களுக்காக கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக வலுவாக நம்பும் பூமியை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் பாலஸ்தீனியர்கள் இஸ்லாமிய தத்துவ நூலான குர்ஆனை இறுக்கமாக பின்பற்றுபவர்கள் .

அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவரைக் காபீர் என்பார்கள். காபீர்கள் மிருகத்திலும் கீழானவர்கள் அவர்கள் அல்லாஹ்வினை ஏற்க மறுத்தால் கொன்று விட வேண்டும் அல்லது கீழ்ப்படிந்து தங்களுடைய பெண்களை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிட்டு அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு உண்டு.

சிலுவை மரணம்
ஆனால் அதே நிலத்தில்தான் இயேசு கிறிஸ்துவின் பைபிள் என்கின்ற தத்துவமும் தோன்றியது. அது அன்பை போதிக்கின்றது.

ஆனாலும் இங்கே இந்த மூன்று தத்துவங்களும் வேறுபட்டவையாக இருப்பினும் தோராவும், பைபிளும் ஓர் அணியில் தற்போதிருக்க எதிரணியில் குர்ஆனும் நிலையடுத்துள்ளது. மத்திய கிழக்கில் தோன்றிய மூன்று தத்துவங்களான தோராவும் அல்குர்ஆனும் பைபிளும் மோதும் களமாக இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதி இன்று விளங்குகிறது. வரலாற்று ரீதியாக இன்றைய அரபுலகத்துக்கும் மேற்குலகத்துக்குமான யுத்தம் கிமு ஐந்தாம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்டது.

அதன் தொடர்ச்சிதான் இன்று காசா நிலத் தொடரில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனர்களுக்கும் இடையிலான யுத்தமாக தொடர்கிறது. மிகப் பழமையான சிலுவை மரணம் ஹெரோடோடஸால் (Herodotus) குறிப்பிடப்பட்ட பண்டைய கிரேக்கத்தின் சமோஸின் தலைவனான பொலிகிரேட்ஸ் (Polycrates), கிமு 522 இல் பாரசீகர்களால் கொல்லப்பட்டார், பின்னர் அவரது சடலம் சிலுவையில் அறையப்பட்டது.

இவரே உலகின் வரலாற்றில் முதலாவதாக சிலுவையில் அறையப்பட்ட மேற்குலகத்தவராவார். முதல் கிரேக்க-பாரசீகப் போரின்போது கிமு 490 இல் பாரசீக படைகளும் கிரேக்கத்தின் ஏதென்ஸ் படைகளுக்கும் இடையே மராத்தான் போர் நடந்தது.

ஏதென்ஸிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) தொலைவில் உள்ள மாரத்தான் கடற்கரையில் அக்காட் பேரரசின் பாரசீகப் படைகளை அதிகமாக எண்ணிக்கையில் இருந்த கிரேக்க நகர அரசுகளின் கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கிய ஏதெனியர்கள் தோற்கடித்தனர். அதுவே முதலாவது புவிசார் அரசியல் யுத்தமாக கணிக்கப்படுகிறது.

கிமு 480 இல், கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீகப் படையெடுப்பின் போது, ஸ்பார்டன் மன்னன் லியோனிடாஸின் கீழ் ஒரு சிறிய கிரேக்கப் படை வீரர்கள் 300 பேரும் கிரேக்கத்தில் உள்ள தெர்மோபைலே கணவாய் 4 மைல்கள் நீளமுள்ள பகுதியில் பாரசீகர்கள் கிரேக்கத்துக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தி சண்டையிட்டு மரணித்தனர். அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் “”கிரேக்கத்தின் பெண்களே உங்களை பாதுகாப்பதற்கு 300 சிங்கங்கள் இங்கே உறங்குகின்றன”” என்ற வாசகம் இன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

இவை மேற்குலகத்தவர்களுக்கும் மத்திய கிழக்குக்குமான பகையின் வன்மத்தை வெளிப்படுத்துகின்றன. உலகின் முதலாவது வரலாற்று ஆசிரியரான ஹெரடோட்டஸ் . (Herodotus), தனது “” The Histories “” என்ற தனது வரலாற்று நூலில் (கிமு 425) கிரேக்க-பாரசீகப் போர்களின் நீண்ட கணக்கு (a long account of the Greco-Persian Wars) எனக் குறிப்பிடுகின்றார்.

கிழக்கு வாணிபத்தின் தரைவழி பாதை
பின்நாளில் கிபி 1092 தொடக்கம் கிபி 1172 வரையான காலத்தில் கிறிஸ்தவர்களின் புனித தளமான ஜெருசலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்பதற்காக ஐரோப்பியர்கள் தொடர்ந்து 196 ஆண்டுகள் ஒன்பது தடவைகள் நீண்ட யுத்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அது சிலுவை யுத்தம் என அழைக்கப்படுகிறது. இதை மத்திய கிழக்குக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையிலான கடும் பகைமையின் வெளிப்பாடு. எனினும் ஐரோப்பியர்களால் அன்று ஜெருசலத்தை கைப்பற்ற முடியவில்லை.

அராபிய நிலத்தில் இஸ்லாமியர்கள் படைக் கட்டுமானத்துடன் தத்துவார்த்த ரீதியிலும் எழுச்சியுடன் வெற்றி அடைந்திருந்த நிலையில் மேற்குலகத்தினரால் இஸ்லாமியர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. ஒரு மதத் தலத்தை பாதுகாப்பதற்கும், தம்பசப்படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட யுத்தமே சிலுவை யுத்தம் என்று சொல்லப்பட்டாலும் அது அந்த நிலத்தை மையப்படுத்தியே நிகழ்ந்தமையினால் அது ஒரு புவிசார அரசியல் யுத்தமாகவே சொல்லப்பட வேண்டும் அதனைத் தொடர்ந்து அராபிய நிலத்திலிருந்து தொடர்ந்து இஸ்லாமியர்கள் தமது அரசை விஸ்தரித்து கிழக்கு ரோமப் பேரரசின் தலைநகரான கென்ஸ்டாண்டிநோபிள் (இஸ்தான்புல்) ஓட்டோமான் துருக்கியர்களினால் கிபி 1453 இல் கைப்பற்றப்பட்டது.

இது ஐரோப்பியர்களுக்கு இஸ்லாமியர்களால் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி. பொஸ்போரஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது.

பொஸ்போரஸ் நீரிணை, ஐரோப்பாவையும், ஆசியாவையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இருகரைகளிலும் அமைந்துள்ள கென்ஸ்டாண்டிநோபில் நகரம் இரு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. இந்த நகரம்தான் மேற்குக் கிழக்கு வாணிபத்தின் தரைவழி பாதையும்கூட. ஐரோப்பியர்களின் கிழக்கு நாடுகளுக்கான தரைவழிப் பாதை இதன் மூலம் தடுக்கப்பட்டது.

மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி 330 – 395 வரை ரோமப் பேரரசின் தலைநகரமாகவும், 395 – 1453 வரை பைசாந்தியப் பேரரசின் தலைநகராகவும், 1453 – 1923 வரை ஓட்டோமான் பேரரசின் தலைநகரமாகவும் இது விளங்கியது.

இந்த நகரத்தை1453ல்ஓட்டோமான் துருக்கிய இஸ்லாமியர்கள் கைப்பற்றியதும் பைசாந்தியப்பேரரசை ஓர் இஸ்லாமிய பேரரசாக ஐரோப்பிய நிலத்துக்குள் மாற்றிவிட்டனர். இது இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் நிகழ்த்திய ஓர் அரசியல் புவியியல் மாற்றமாகும்.

இஸ்லாமிய படர்ச்சியின் விளைவு
இவ்வாறுதான் கிபி 6ம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமியப் பேரரசு இன்று அரேபியா, வடஆபிர்க்கா, பாரசீகம் உட்பட அரபுலகம் எனப்படும் 26 நாடுகளையும் தெற்கு,தென் கிழக்கு ஆசியாவில் ப்ரூணை, மலேசியா, இந்தோனேசியா, வங்காள தேசம், மலேசியா, மாலதீவுகள் உள்ளிட்ட 48 இஸ்லாமிய நாடுகளை தோற்றுவித்திருக்கிறது.

இதனை நபிகள் நாயகம் அவர்களின் அரசியல் புவியியல் மூலோபாயம் எனக் குறிப்பிடலாம். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) 1969 இல் நிறுவப்பட்டது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இன்று 57 உறுப்பு நாடுகயை கொண்டுள்ளது. இதனை மேற்குலத்தவர்கள் அச்சத்துடனேயே நோக்குகின்றனர்.

ஐரோப்பா நோக்கிய இஸ்லாமிய படர்ச்சியின் விளைவுதான் 1483ல் டீகோ காவோவும் அத்திலாகடல்வழியாக கொங்கொ நதிவரை சென்றார். அவரைப் பின்பற்றி 1488ல் பார்டோலொமு டயஸ் நன்னம்பிக்கை முனைவரை சென்று மீண்டார். இவர்களின் கடல்வழித்தடத்தை பின்பற்றி வாஸ்கோடகாமா கீழைத் தேசங்களுக்கு செல்வதற்கான புதிய கடற் பாதையைத் தேடி ஆப்பிரிக்க கண்டத்தின் நன்னம்பிக்கை முனையை சுற்றி இந்தியாவுக்கான புதிய கடல்வழிப் பாதையை 1498ல் கண்டுபிடித்தார்.

இங்கே இஸ்லாமியர் ஐரோப்பியர்களுக்க கொடுத்த அழுத்தமும், ஆக்கிரமிப்பும் மேற்கு ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது, புதிய கண்டுபிடிப்பக்களுக்கு ஊக்கியாக தொழிற்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதுவே இந்த பூமியை ஐரோப்பியரின் ஆளுகைக்கு உற்படுத்திய வாஸ்கோடகாமா யுகத்தை தோற்றுவித்தது.

கடந்த 500 ஆண்டுகால வாஸ்கொடகாமா யுகத்தின் கட்டமைப்புத்தான் இன்றைய உலகம். ஆனாலும் இஸ்லாமியர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறித்தனம் இன்று வரைக்கும் மேற்கு உலகத்தினரிடம் படிந்து கிடக்கிறது. அடுத்து மேற்குலகத்தவரின் உலகளாவிய ஆளுகை மூலோபாயத்தின் மையப் பகுதியாக மேற்கு ஆசிய பகுதி விளங்குகிறது.

அதனாற்தான் அப்பகுதியை மத்தியகிழக்கு என ஐரோப்பியர்கள் அழைக்கிறார்கள். பிரித்தானியாவை சேர்ந்த புவியியல் அறிஞரான Halford John Mackinder (கல்போர்ட் ஜோன் மைக்கிண்டர்) 1904ம் ஆண்டு முழு உலகம் தழுவிய ஆளுகைக்கான மூலோபா கோட்டாடு (பூகோளம் தழுவிய அரசியல்) ஒன்றை வெளியிட்டார்.

அதுவே இருதய நிலக்கோட்பாடு (Heartland theory)என அழைக்கப்படுகிறது. இருதய நிலம் எனப்படுவது மத்திய ஐரோ-ஆசிய பகுதியும் மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கிய பகுதியை மூலோபயர ரீதியில் உலகின் “”இருதயநிலம்“” (Heartland ) என அழைக்கின்றனர்.

ஜேர்மனிய சர்வதிகாரி
ஏனெனில் இந்த நிலப்பரப்பை யார் ஆள்கிறார்களோ, கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களினால் ஆசியா ஆபிரிக்கா ஐரோப்பா கண்டங்களையும் அத்தோடு இந்து,பசுபிக் அத்திலாந்தி சமுத்திரங்களையும் கட்டுப்படுத்த முடியும். இந்து சமுத்திரத்தையும் அட்லாண்டிக் சமுத்திரத்தையும் கட்டுப்படுத்துவதற்கு இந்த இருதய நிலப் பகுதி இன்றியமையாதது. இப்ப பகுதியை யார் தன் கட்டுப்பாட்டங்கள் கொண்டு வருகிறார்களோ அவர்களால் இந்த உலகத்தை ஆளவும் கட்டுப்படுத்தவும் நிர்ணயம் செய்யவும் முடியும் என மைக்கின்டர் தனது புவியியல் அறிவின் ஊடாக பூகோளம் தழுவிய ஆக்கிரமிப்பு , ஆளுகை மேலாண்மை மூலோபாயம் ஒன்றை முன்வைத்தார்.

அதுவே இருதய நிலக்கோட்பாடு (Heartland theory) எனப்படுகிறது. அது மேற்குலக மனநிலையில் அவர்களுக்கு பொருத்தமானதும் சரியானதும் கூடத்தான். மைக்கிண்டர் இருதயநிலக் கோட்பாட்டை வெளியிடுவதற்கு முன்னர் நடைமுறையில் இரு ஐரோப்பியர்கள் பிரயோகித்துப் பார்த்துள்ளனர்.

மசிடோனியாவில் பிறந்த கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் (கி. மு. 332 – கி. மு. 323) பிரயோகித்து பார்த்தார். துரதிஷ்டவசமாக அவர் தனது இளவயதில் மரணிக்க நேர்ந்து விட்டது. அதே பாணியில் பின்னாளில் பிரான்சிய மன்னன் நெப்போலியன் முயன்று தோற்றுப் போனார். அதன் பின்னர் மூன்றாவதாக ஜேர்மனிய சர்வதிகாரி அடல்ட் ஹிட்லர் முயன்று இருதய நிலத்தை கைப்பற்றினாலும் அதனைத் தொடர்ந்து தக்கவைப்பதில் தோல்வியடைந்து அழிந்து போனார்.

இவ்வாறு 3 ஐரோப்பியர்களினது ஆக்கிரமிப்பும், அதன் பின்னன அணியமைத்தல். தற்பாதுகாப்பு அகியவற்றின் முகாமைத்துவமும் முழுஅளவிலான வெற்றியை அடையமுடியாது போயின. ஐரோப்பியர்கள் தாங்கள் இழந்துபோன பெருமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் உலகின் வளங்களை சூறையாடவும், கைக்கொள்ளவும் மைக்கிண்டரின் இருதயநிலக் கோட்பாட்டை கையில் எடுத்து செயற்படுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த உலகை தலைமை தாங்குவதற்கு அமெரிக்காவும் இந்த இருதய நிலத்தை தன்னுடைய செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருக்கவே முனைகிறது. எது எப்படி இருப்பினும் அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் மேற்குலகம் என்ற அணியைச் சார்ந்தவர்கள்தான்.

இந்த மேற்குலகம் நேட்டோ என்னும் இராணுவக் கூட்டு ஒன்றை உருவாக்கி அதனூடாக பலம்வாய்ந்த இராணுவ அணியை கொண்டுள்ளது. இவர்கள் தங்களுக்குள்ளே எவ்வாறு போட்டியிட்டாலும், இந்த உலகத்தை ஆளுவதில் மூலவளங்களை சூறையாடுவதிலும் தமக்கிடையே அவரவர் தத்தம் தகுதிக்கு ஏற்றவாறு பங்கீடுகளை செய்துகொள்வார். மேற்குலகு-ரஷ்யா-சீனா என்ற முப்பரிமாண உலகளாவிய அரசியலில் ரஷ்சியா தனது் பிரந்தியத்துக்குள்ளேயே இன்னும் குறுங்காலத்திற்கு நின்றுகொள்ளும்.

எனவே அடுத்த மேற்குலகம்-சீனா என்ற இரு அணிகளுக்கு இடையில் இந்துசமுத்திரத்தை பங்குபோடுவதில் போட்டோ போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் மத்தியகிழக்கு எனப்படும் இஸ்லாமி உலகம் மேற்குலகத்தினருக்கு எப்போதும் சவாலாக கானப்படுகிறது.

இந்துசமுத்திரத்தை ஐரோப்பாவுடன் நேரடியாக இணைக்கக்கூடிய புவியியல் சாதகத் தன்மையும் சீனாவின் இந்துசமுத்திர நுழைவை கட்டுப்படுத்த அல்லது ஆதரிக்கும் வல்லமையும் இஸ்லாமிய உலகத்திற்குண்டு. மேற்குலகத்தவரின் உலகளாவிய ஆளுகை மூலோபாயத்திற்கு மத்திய கிழக்கின் புவிசார் அரசியலும் உலகளாவிய வர்த்தகத்தில் மத்திய கிழக்கின் கேந்திரத் தன்மையும் பற்றி இனி அடுத்த தொடரில் பார்ப்போம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.