;
Athirady Tamil News

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் விளைவு! சர்வதேச கப்பல்களைத் தாக்கும் ஹவுதி!

0

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யேமன் நாட்டில் உள்ள (ஈரான் ஆதரவு பெற்ற) ஹவுதி அமைப்பானது, இஸ்ரேலுடனான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்த நிலையில், இஸ்ரேலுடனான போரில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு, ஹவுதி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, செங்கடல் வழியே செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் போர் மற்றும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தானது, செங்கடலில்தான் 40 சதவிகிதம்வரையில் நடைபெறுகிறது. செங்கடல் வழியான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், அதன் விளைவு உலகச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறி, ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, அமெரிக்கா தொடங்கிய போரை, தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் ஈரான் நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.