;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்

0

சமூகப் பொருளாதார சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் வேலணை பிரதேச செயலாளர் கே. சிவகரன் தலைமையில் 22.06.2025 ஆம் திகதி வேலணைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திலும் கல்விசார் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், காரைநகர், மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு ஆகிய ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டவுள்ளன.

சமூக நலன்விரும்பி நடராஜா ஜெயவர்த்தனா அவர்களால் சமூக பொருளாதார சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூபா ஐந்து இலட்சம் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமூக நலன்விரும்பி நடராஜா ஜெயவர்த்தனா, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் இ.செந்தூரன், மாவட்ட உளவள சமூக உத்தியோகத்தர், மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.