;
Athirady Tamil News

அரசாங்கம் தொலைக்காட்சி நிறுவனங்களை தடை செய்யுமா?

0

எம்.எஸ்.எம். ஐயூப்

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அழித்துவிட முயல்வதாக எதிர்க் கட்சிகளும் சில ஊடக அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன. அண்மையில் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு எதிராக பொலிசார் இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாடொன்றை அடுத்தே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஊடகங்களின் உள்ளடக்கத்தின் தகுதியை பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் பொலிசாருக்கு இல்லை என்றும் பொலிசாருக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதானது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும் விமர்சகர்கள் கூறுகின்னர். ஆயினும் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பற்றி அவர்கள் எதையும் கூறுவதில்லை.

இதனால் அவர்கள் அத்தொலைக்காட்சி சேவையின் சகல நடவடிக்கைகளையும்; மறைமுகமாக நியாயப்படுத்துகின்றனர் என்று அரச ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

டிட்வா சூறாவளியைப் பற்றி வாநிலை அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதாவது நவம்பர் மாதம் 12 ஆம் திகதியே தமது தொலைக்காட்சி சேவை மூலம் தகவல்களை தெரிவித்தும் அதன் பாதிப்புக்களை குறைகக் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மற்றொரு தொலைக்காட்சி சேவை கருத்து தெரிவித்ததை அடுத்து எதிர்க்கட்சிகள் அதன் அடிப்படையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்ததன. அதன் பின்னரே அரசாங்கமும் ஊடகங்களை கடுமையாக விமர்சித்து வருகிறது.

மேலே இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர் ஒருவர் கலந்துரையாடல் ஒன்றுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவை அழைத்து தமது குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரிடம் கேள்விகளை கேட்டார்.

நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வாநிலை அதிகாதரிகள் குறிப்பட்ட தாழமுக்க நிலை நவம்பர் 18 ஆம் திகதி முடிவடைந்ததாகவும், அதனை அடுத்து மற்றொரு தாழமுக்க நிலையைப் பற்றி வாநிலை அதிகாரிகள் தெரிவித்த போதிலும் அது மலேசியா பக்கம் சென்றதாகவும் அதன் பெயர் சென்யார் என்றும் நவம்பர் 27 ஆம் திகதியே அதிகாரிகள் டிட்வா கூறாவளியைப் பற்றி அறிவித்தார்கள் என்றும் அப்போது அமைச்சர் ஆதாரங்களோடு சுட்டிக் காட்டினார்.

நவம்பர 25 ஆம் திகதி முதல் மீனவர்கள், மற்றும் ஆபத்தான பிரதேசங்களில் வாழ்வோர் எச்சரிக்கப்பட்டதாகவும் 27 ஆம் திகதி மறுநாள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாகவும் 28 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க் கட்சித் தலைவர்களை அழைத்து நிலைமையைப் பற்றி கலந்துரையாடியதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் அதிகாரிகள் பணிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதன் பின்னர் இரண்டு நோயளர்களின் மரணத்தை அடுத்து இந்தியாவில் தயாரிககப்படும் ஒன்டான்செட்ரோன் எனபப்டும் மருந்து பாவனை இலங்கை மரு;துவமனைகளில் இடைநிறுத்தப்பட்டது. இதனை சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற இமியுனோகுளொபியூலின் விவகாரத்தோடு ஒப்பிட்டு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறினர்.

இது அவசரப்பட்டு சுமத்தும் குற்றச்சாட்டாகும். ஏனெனில் சம்பந்நதப்பட்ட இரண்டு மரணங்களுக்கும் இந்த ஒன்டான்செட்ரோன் எனப்படும் மருந்து தான் காரணம் என்று இன்னமும் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை. இது இன்னமும் விசாரணை மட்டத்திலேயே இருக்கிறது.

அதேவேளை இந்த மருந்து கடந்த அரசாங்கததின் காலத்தில் அதனை தயாரிக்கும் இந்திய நிறுவனத்திடம் கோரப்பட்டதாகும். கெஹெலியவைப் போல் அந்த விடயத்தில் தற்போதைய அமைச்சர் சம்பந்தப்படவில்லை. அம்மருந்து இவ்வாண்டு மூன்று முறை இலங்கை;கு தருவிக்கப்பட்டுள்ளது. அப்போது நடைபெறும் பரிசோதனைகளிலும் அமைச்சர் நலிந்த சம்பந்தப்பட்டதாக எவரும் குற்றஞ்சாட்டவில்லை. விசாரணை நிலையில் உள்ள ஒரு சுகாதார விடயத்தை ஊதிப் பெருக்குவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும் என்று அமைச்சர் கூறுகிறார்.

அத்தோடு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரும் இமியுனோகுளோபியுலின் மருந்து தருவிக்கப்பட்டது. அப்போதும் ஊடகங்களும் சில எதிர்க்கட்சிகளும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய தருவித்த மருந்தைNயு இந்த அரசாங்கமும் தருவிக்கிறது என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் அந்தப் பெயரில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மருந்துக்கள் அனைத்தும் தரம் குறைந்தவையல்ல. முன்னாள் அமைச்சர் கெஹெலிய தனிப்பட்ட முறையில் தலையிட்டு குறிப்பிட்டதோர் நிறுவனத்திடமிருந்து தருவிக்கப்பட்ட மருந்து மட்டுமே தரக்குறைவானமாக இருந்தது.

இந்த விடயங்களையெல்லாம் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது குறிப்பிட்ட அமைச்சர் நலிந்த இவை சுகாதார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்டபு போன்ற விடயங்கிளல் மக்கள் மத்தியில் பீதியை பரப்பும் செயலாகும் என்றும் அது தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் ஒளிபரப்பு அனுமதிப்ப பத்திரத்தின் நிபந்தனைகளை மீறும் செய்லாகும் என்றும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் கூறினார்.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் தற்காலிகமானது என்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அந்த அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற ஊடக அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் இரண்டு பக்கம் இருக்கிறது. சில விடயங்களில் தற்போதைய அரசாங்கமும் அநாவசியமாக ஊடகங்களுடன் மோதுவதை காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுடன் தொடர்புள்ள அருண என்ற சிங்கள நாளிதழில் வெளியான ஒரு செய்தி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இரகசிய பொலிசார் அப்பத்திரிகையின் ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை அழைத்திருந்தனர். ஊடக அமைப்புக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இலேபெரும் இரகசிய பொலிஸ் தலைமையகத்துக்குச் செல்லவும் இல்லை, பொலிசார் அந்த விடயத்தை அதன் பின்னர் விரட்டவும் இல்லை.

அதேவேளை பிரதான பிரவாகத்தின் அரச ஊடகங்களைத் தவிர ஏறத்தாழ சகல ஊடகங்களும் அதாவது தொலைக்காட்சி நிறுவனங்கள். வானொலி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளும் அரச எதிர்ப்பு கொள்கையையே கடைபிடித்து வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தை எதிர்த்தே கருத்து வெளியிட்டு வருகின்றனர். எனவே பல ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த மோதலின் வெளிப்பாட்டையே இப்போது காண்கிறோம்.

தமது கருத்துக்களை ஊடகங்கள் திரிபுபடுத்தலாம் என்ற அச்சத்தால் தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களை அணுக தயங்குவதாக தெரிகிறது. இதன் காரணமாக தமக்கு கிடைக்கும் தகவல்களை உறுதி செய்துகொள்வது ஊடகவியலாளர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அத்தோடு அத்தகவல்களை மற்றைய ஊடகங்கள் வெளியிடலாம் என்ற காரணத்தால் ஊடகவியலாளர்கள் சில சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு அத்தகவல்களை உறுதிபடுத்திக்கொள்ளாமலே வெளியிட நிர்பந்திக்கப்படுகின்றனர். வெளியிடப்படும் தகவல் சரியாக இருந்தால் பிரச்சினையில்லை. இல்லாவிட்டால் அவ்வூடகம் அரச தலைவர்களின் கோபத்துக்கு ஆளாகிறது. அரச தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான இந்த விரிசல் நிலையும் இரு சாராருக்கிடையிலான மோதலுக்கு காரணமாகிறது.

எனினும் கடந்த காலங்களில் பதவியியல் இருந்த அரசாங்கங்கள் ஊடகங்கள் விடயத்தில் கடைபிடித்த அடக்குமுறை கொள்கையை தற்போதைய அரசாங்கம் இதுவரை கடைபிடிக்கவில்லை. எதிர்காலத்தில் நிலைமை என்னவாகும் என்பதை இப்போத கூற முடியாது. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. தீயிட்டு கொழுத்தப்பட்டன. அந்த அரசாங்கங்களின தலைவர்கள் தான் தற்போது எதிர்க்கட்சிகளில் இருந்து ஊடக சுதந்திரத்தைப் பற்றி பெரிதாக பேசுகிறார்கள்.

அருண பத்திரிகையின் ஆசிரியர் இரிகசிய பொலிசுக்கு அழைக்கப்பட்ட போது நாம் இது போன்ற கடந்த கால அடக்குமறை சம்பவங்கள் சிலவற்ரறை குறிப்பிட்டு இருந்தோம். அவற்றை மீண்டும் இங்கே குறிப்பிடுகிறோம். ‘ஜே.ஆர்.ஜயவர்தன மற்றம் ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களின் காலத்தில் ஊடகவியலாளர்களான ரிச்சர்ட் டி சொய்ஸா, எச்.ஈ தயாநந்த, விமல் சுரேந்திர ஆகியோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதனை அடுத்து சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் மைல்வாகனம் நிமலராஜன,; தர்மரத்தினம் சிவராம் ஆகியோர் கொல்லப்பட்டனர். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் வீடு தாக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகிய பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றனர். ஊடகவியலாளர்களான லசந்த விகரமதுங்க, பிரதீப் எக்னலிகொட, அற்புதராஜா நடராஜா, ஐயாத்துறை நடராஜா போன்ற பலர் கொல்லப்பட்டனர். உதயன், சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடக நிறுவனங்கள் தாக்கப்ட்டன.

அதனை அடுத்து பதவிக்கு வந்த ரனில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியேரின் காலத்தில்; அவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறாவிட்டாலும் அவர்கள் ஊடக சுதந்திரத்தை மிக மோசமாக பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்ற முயன்றனர். அதில் ஒன்றான நிகழ்நிலை காப்புச் சட்டம் ரனிலின் காலத்தில் நிறைவேற்றப்பட்டது.”

இந்த மோதலை தவிர்க்க அரசாங்கம் ஊடகத்துறை ஆணைக்குழுவொன்றை நிறுவ வேண்டும் என்று பல ஊடகவியலாளர்கள் அண்iயில் கோரியிருந்தனர். ஆனால் அவ்வாறானதோர் அரச அமைப்பு நிச்சயமாக அரசாங்கத்தை சார்ந்ததாகவே இருக்கும். அதேவேளை தற்போதைய இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழ ஊடகங்களை மேற்பார்வை செய்தாலும் அதன் மூலம் ஊடகங்கள் ஒழுக்க நெறிகளை மீறுவதை தடுக்க முடியாதிருக்கிறது.

எனவே அது போன்றதோர் சுயாதீனமான நிறுவனத்துக்கு சட்ட அந்தஸ்த்து வழங்கும் வகையில் ஊடக அமைப்புக்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடி புதிய சட்டமொன்றை கொண்டுவர வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.