;
Athirady Tamil News

புங்குடுதீவில் நடப்பது என்ன? “தடவிப்பார்” ஊடகத்தின் பின்னணியிலும் நடக்கும் அலப்பறைகள் என்ன??

0

புங்குடுதீவில் நடப்பது என்ன? “தடவிப்பார்” ஊடகத்தின் பின்னணியிலும் நடக்கும் அலப்பறைகள் என்ன??

அண்மையில் புங்குடுதீவுப்பகுதியில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்று இருக்கின்றன ஆனாலும் இச்சம்பவங்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது வேடிக்கையாக இருக்கின்றது. இரண்டு சம்பவங்களும் பாரதூரமான சம்பங்களாக இருந்தும் பாதிக்கப்பட்டவர்களும் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்?? சரி விடையத்துக்கு வருவோம்.

முதலாவது சம்பவம் இருபது தினங்களுக்கு முன்னர் இறுப்பிட்டிப் பகுதியில் சைவ ஆலயத்திருவிழா ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மிகமோசமாக அதன் கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டது.
இரண்டாவது சம்பவம் கிருத்துவ மதகுரு ஒருவர் திருப்பலி ஒப்புக்குடுத்து (கிருத்துவ மக்களின் மிகமுக்கியமான வழிபாடு) வெளியே வரும்போது மிலேச்சத்தனமான முறையில் தாக்கப்பட்டும், தாகாத வார்த்தைப் பிரயோக மற்றும் கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளது.

முதலாவது விடையத்தை காரின் உரிமையாளர் எவ்வாறு கையாண்டார் என்பது இன்றுவரை தகவலில்லை ஆனால் இரண்டாவது சம்பவத்தின் பின்னணியில் பேச்சுவழக்கில் “தடவிப்பார்” என்றும் சொல்லக்கூடிய ஊடகத்தின் பின்புலத்தை வைத்து குறித்த பங்குத்தந்தையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தி அவரை அடிபணிய வைத்துள்ளார்கள் போல் தெரிகிறது.

அதுபோக குறித்த “தடவிப்பார்” இணையவழி ஊடகமானது புங்குடுதீவில் தபாலகத்தில் (இறுப்பிட்டி உபதபாலகத்தில்) பணிபுரியும் ஒருவரையும் பணிக்கமர்த்தி கடமை நேரங்களிலும் தமது சுய விளம்பரத்திற்காக பயன்படுத்துவது மக்கள் மத்தியில் விசனந்தை உண்டுபண்ணுகின்ற அதேவேளை தமிழ்த்தேசியவாதியாக தன்னை வெளி உலகத்திற்கு பறைசாற்றும் குறித்த ஊடக நிறுவுனர் தான் வதியும் கனடா நாட்டிலும் ஊர் அமைப்பின் நிகழ்வில் மிதவெறியில் நின்று “அலப்பறை” செய்ததும், ஊரில் தமிழ் அமைச்சரின் கட்சி உறுப்பினர்களோடு கூட்டுச் சேர்ந்திருப்பதும் சந்தேகப்பட வைக்கின்றது. ஆக தமிழ் அமைச்சரின் கட்சி ஆதரவோடு இயங்கி வருகின்ற “தடவிப்பார்” ஊடகத்திற்கு பயந்து குருவானவர் ஒரு கன்னத்தில் அறைந்நதால் மறுகன்னத்தையும் காட்டி நிற்கின்றார்.

இதைவிட முக்கியமாக “புங்குடுதீவில் தண்ணி இல்லாமல் மாடுகள் சாகுது” எனக் கூறிப் புலம்பெயர் புங்குடுதீவு உறவுகளிடம் காசை ஆட்டையைப் போடும் எண்ணத்தில், சுவிஸில் இருந்து சென்று ஊரில் குடித்துக் கும்மாளமிடும் ஒருவரும் அலறியுள்ளாராம். “அவன் தண்ணி அடிக்கும் காசே மாட்டுக்கு தண்ணி அடிக்கக் காணும், அவன் தனக்கு தண்ணி வேண்டும் என்பதுக்காக மாட்டுக்கு தண்ணி இல்லை, மாடு பசியால் சாகுது” என்று கதை விடுகிறானென மடத்துவெளி, வல்லன் நாகதம்பிரான் சுற்றாடல் மக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை தாங்கள் கேணி திருத்துகிறோம், மாட்டுக்கு தண்ணி அடிக்கிறோமென “கதை” சொல்லிக் கொண்டு, அதனை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்பதுக்காக கனடாவில் உள்ள முன்னாள் அதிபரின் பெயரையும் பயன்படுத்துகிறாராம். இப்படியே சிலர் புங்குடுதீவின் பெயரைப் பயன்படுத்தி தம்மை வளப்படுத்த முனைகிறார்களாம். புங்குடுதீவு மக்களே உஷார். (தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார புகைப்படங்கள்பிரசுரிக்கப்படும்)

தகவல்.. – புங்குடுதீவில் இருந்து “ஊர்க்குருவி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.