;
Athirady Tamil News

ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ)

0

ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு, ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு.. (படங்கள் & வீடியோ)

கனடா வாழ் உறவுகளான ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வு ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு ஆனந்தமாக கொண்டாடப்பட்டது. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

#############################
கனடா வாழ் உறவுகளான உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் திருமண நாள் நிகழ்வை முன்னிட்டு, அவர்களின் நிதி பங்களிப்பில் வழமை போலவே வவுனியா மணிப்புரத்தில் உள்ள ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு விசேடமாக திருமணத் தம்பதிகளின் சார்பில் திருமண கேக் வெட்டி சிறப்பான உணவு வகைகளோடு கொண்டாடியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

மனநிலை பாதிக்கப்பட்டு உறவுகளாலும், சமூகத்தாலும் ஒதுக்கி வைக்கப்படும் நிலையில் பராமரிப்பின்றி, பாதுகாப்பற்ற நிலையில் வாழும் அன்னையர்களை, பாதுகாப்பாய் உணவு உடை உறையுள் என அனைத்து வசதிகளையும் கொண்ட ஆனந்த இல்லத்தில் வாழுகின்ற அன்னையர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

அவ்வாறே இன்றைய நாளிலும் விசேடமாக உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்தில் உள்ள ஆனந்த விநாயகர் ஆலயத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளுக்கு” இறையாசி வேண்டி விசேட பூசை செய்யப்பட்டு, விசேட வழிபாடும் தேவார பாராயணமும் இடம் பெற்று தீபாராதனைகள் காட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் திருமண கேக் வெட்டப்பட்டு விசேட உணவு வழங்கப்பட்டது.

ஆனந்த இல்லத்து அன்னையர்கள் மனம் மகிழந்து ஆடிப் பாடி, சந்தோசமாக ராஜா ரதீஸ் தம்பதிகள் இல்லம் துலங்க இன்பம் பெருக, துன்பம் நீங்கி சுகங்கள் மலர எல்லாம் வல்ல இறைவன் துணையோடு, பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தார்கள்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
31.01.2021

https://studio.youtube.com/video/8rTeVVqogiE/edit

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு “ராஜா ரதீஷ்” திருமண நாளில் வழங்கப்பட்ட, “கற்றல், உலருணவுப் பொதி” வழங்கல்.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.