;
Athirady Tamil News

கருங்கடலில் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்

0

மாஸ்கோ,

ரஷியா, உக்ரைன், துருக்கி, ருமேனியா, ஜார்ஜியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்ட சிறிய கடல் கருங்கடல் ஆகும்.

ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியிலும், மேற்கு ஆசியாவிலும் அமைந்துள்ள இந்த கடல் 4 புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் கஜகஸ்தானில் கச்சா எண்ணெய் வாங்குவாகுவதற்காக கருங்கடலில் சென்றுகொண்டிருந்தது.

ரஷியாவின் நொவொரோசிக் துறைமுகம் அருகே இன்று அதிகாலை சென்றபோது கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கப்பலில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, இந்த டிரோன் தாக்குதலில் கச்சா எண்ணெய் கப்பலில் பயணித்த 24 மாலுமிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.