;
Athirady Tamil News

சுன்னாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவர் கைது – போதைப்பொருட்கள் , வாள் என்பவை மீட்பு

0
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் மூவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒருவரிடம் இருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் , மற்றையவரிடமிருந்து 2 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மூன்றாவது நபரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.