;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின், முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

0

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
#######################################

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தை பூர்வீகமாக கொண்டவரும், கிளாக்கர் என அன்புடன் அழைக்கப்பட்டவரும், கொழும்பு வெள்ளவத்தையில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் செல்லையா கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக கிராமத்தில் வாழும் வயோதிபத் தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

முன்னதாக சதுர்த்தி திவச தினத்தன்று விசேட ஆத்மசாந்தி நிகழ்வும், திவச நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் திவச நிகழ்வு நடைபெற்ற அயற்கிராமங்களில் வாழும் தாயக உறவுகளுக்கு மதிய உணவு பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே இன்றைய நாளிலும் எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், நிர்வாக சபை உறுப்பினருமான திருமதி நவரத்தினம் பவளராணி அவர்களால் இனங்காணப்பட்ட நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்தில் வாழும் வாயோதிபர்களைக் கொண்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிளாக்கர் என அழைக்கப்பட்ட அமரர் செல்லையா கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு சதுர்த்தி திதியினை அனுஸ்டிக்குமுகமாக அன்னாரின் குடும்பத்தின் சார்பில் அன்னாரின் மகள் திரு.திருமதி. ஜோதிதாசன் சித்திரா குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி நிகழ்வுகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அமரத்துவமடைந்த கிளாக்கர் என அன்புடன் அழைக்கப்படும் செல்லையா கனகசபாபதி அவர்களின் ஆத்மாசாந்தியடைய தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இறைவனை வேண்டுவதோடு, தனது தந்தையாரின் திவச திதியினை முன்னிட்டு, தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆத்மசாந்தி நிகழ்வுக்கும், மக்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு மற்றும் உலருணவுப் பொதிகள் அனைத்துக்குமான நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் மகள் ஜோதிதாசன் சித்திரா குடும்பத்தினருக்கும் தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

28.10.2021

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.