;
Athirady Tamil News

கனடா வாழ் புங்குடுதீவு சரஸ்வதி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

கனடா வாழ் புங்குடுதீவு சரஸ்வதி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான “சரஸ்வதி அம்மா” என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.சரஸ்வதி குணராஜா அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த தினம் பல்வேறு வாழ்வாதார உதவிகளுடன் இன்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைச் சேர்ந்தவரும் அமரர் குணராஜா அவர்களின் துணைவியாருமான கனடாவில் வசிக்கும் “சரஸ்வதி அம்மா” என அன்புடன் அழைக்கப்படும், திருமதி.சரஸ்வதி குணராஜா அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் சார்பில் வழங்கப்பட்ட நிதியில் இன்றையதினம் மாணவ மாணவிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொள்ள வறுமைக்கோட்டுக்கு உட்படட கிராம மக்களுக்கான பெறுமதியான உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டதுடன், அக்கிராமத்தில் வாழும் தேவையுடைய மக்களுக்கு பயன்தரு தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வவுனியா எல்லைப்புறக் கிராமமொன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மன்றத்தின் கிராமிய ஒருங்கிணைப்பாளர்களும் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய நாளில் கனடாவில் வதியும் திருமதி.சரஸ்வதி குணராஜா அவர்கள் தனது எழுபத்தைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்வில் பிறந்தநாளை விசேசமாக ஒழுங்குபடுத்தி பிறந்தநாள் கேக் வெட்டி, பிறந்தநாள் பாட்டுப் பாடி சிறுவர், சிறுமிகள் உட்பட நிகழ்வில் கலந்து கொண்டோர் தமது வாழ்த்தினைத் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதார கஷ்டத்தில் அப்பிரதேசத்தில் வாழும் குறிப்பிட்ட பொதுமக்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்டோருக்கு சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றைய நாட்டின் இக்கட்டான சூழ்நிலை, பொருளாதார பின்னடைவு போன்றவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஆரம்பிக்கப்பட்டுள்ள “உமா கிராம எழுச்சி வீட்டுத் தோட்ட” நிகழ்வுக்கு உதவும் முகமாக மரக்கறி வகைக் கன்றுகளும், நாத்துகளும், பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டு அக்கிராம மக்கள் மகிழ்ச்ச்சியடைய வைக்கப்பட்டனர்.

புளொட் செயலதிபர் உமா மகேஸ்வரனின் பிறந்த தினத்தின் போது, மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திரு.குணராஜா உதயராஜா அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்பில் ஆரம்பிக்கப்பட்ட “உமா கிராம எழுச்சி வீட்டுத் தோட்டத்தை” தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் இன்றையதினம் இந்நிகழ்வு நடைபெற்றது. மேற்படி திரு.குணராஜா உதயராஜா இன்று பிறந்தநாள் காணும் திருமதி சரஸ்வதி குணராஜா அவர்களின் புதல்வர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலத்தின் தேவை கருதி கிராமம் தோறும் “உமா கிராம வீட்டுத் தோட்டத்தை” உருவாக்கி மக்களின் எதிர்கால வாழ்வுக்கு உதவிட வேண்டுமெனும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் முயற்சிக்கு புலம்பெயர் நாடுகளில் தமது நிகழ்வுகளை நடத்துவோரும் தொடர்ந்து உதவி வருவது மிகவும் சிறப்பம்சமாகும்.

இக்குடும்பத்தினர் தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பல்வேறு வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

திருமதி சரஸ்வதி குணராஜா அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைத்தமைக்காகவும், பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்குவதுக்கான நிதி பங்களிப்பை வழங்கிய அவரது மக்கள் மருமக்கள் ஆகியோருக்கும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

30.06 2023.

கனடா வாழ் புங்குடுதீவு சரஸ்வதி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.