;
Athirady Tamil News

ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிட்ட தமிழ் கட்சிகள், அதேவேளை ஹர்த்தாலுக்கு எதிர்ப்பை வெளியிட்ட லிங்கநாதன்..

0


கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குங்கள்! -தமிழ் தேசிய கட்சிகள் கோரிக்கை!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்தவிடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் இன்று (16)இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த கட்சிகளின் பிரதிநிதிகள்

முல்லைத்தீவு நீதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம்நீதித்துறை சுயாதீனமாக செயற்ப்பட முடியாத நிலமை ஏற்ப்பட்டுள்ளது, அத்துடன் தமிழர் பிரச்சனைக்கு உள்நாட்டில் நீதியை காணமுடியாது என்று நாம் வலியுறுத்திய விடயத்திற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்து காட்டாகவும் அமைந்துள்ளது

இந்த சூழ்நிலையில் தமிழ்மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயற்ப்பாட்டை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இந்த அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து எதிர்காலத்தில் எப்படி செயற்ப்பட வேண்டும் என்ற காத்திரமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்மக்களும் தமிழ்த் தேசிய கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடகிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள கர்த்தால் போராட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தக சங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் சார்பில் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் சந்திரகுலசிங்கம் மோகன், தமிழரசுக்கட்சி சார்பில் ந.கருணாநிதி, ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

**********************************

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பை வெளியிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன்

தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு தான் ஆதரவு வழங்கப்படுவதில்லை என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் (விசு) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இன்று தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த சிலர் கூடி வவுனியாவிலும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் எனக்கு அறியக் கிடைக்கவில்லை. அத்துடன் குறித்த ஹர்த்தாலுக்கு நான் எனது எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதுடன் ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதுடன்,

தமிழர்களின் போராட்டத்தை வைத்து சிலர் நோகாமல் நுங்கு குடிக்க ஆரம்பித்துள்ளனர் இதற்கு இடம் கொடுக்க முடியாது எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.