;
Athirady Tamil News

புலோலி குரும்பகட்டி சனசமூக நிலைய முன்பள்ளிக்கு தளபாடங்கள், புளொட் சுவிஸ் கிளையினால் வழங்கி வைப்பு.. நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி.

0

புலோலி குரும்பகட்டி சனசமூக நிலைய முன்பள்ளிக்கு தளபாடங்கள், புளொட் சுவிஸ் கிளையினால் வழங்கி வைப்பு.. நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி.

மறைந்த புளொட் அமைப்பின் சுவிஸ்கிளை உறுப்பினரான மனோகரன் முருகதாசன் அவர்களின் நினைவாக அவரது பிறந்த ஊரான புலோலியில் அமைந்துள்ள கந்த முருகேசனார் சனசமூக நிலையத்துக்கு புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையின் நிதியுதவியின் கீழ் நூலகக் கட்டிடத் திருத்தத்துக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டதும்

27.01.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளியிலே, குறித்த முன்பள்ளியின் முகாமைத்துவக் குழுவின் தலைவர் மு.ஜெகதேவன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர்கள் உரை, நன்றியுரை ஆகியவற்றுடன் இந்நிகழ்வு நடைபெற்றதும்

தோழர். மனோகரன் முருகதாஸ் அவர்கள் நினைவாக சுவிஸ் கிளையினரால் வழங்கிய நிதியின் ஒரு பகுதி புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரும் ஓய்வுபெற்ற புலோலி வாழ் தபாலதிபர் சந்திரமோகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தோழர்.முருகதாஸின் சகோதரர் முன்னிலையில் இவ்வுதவி செய்யப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் புலோலி, குரும்பகட்டி சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் முன்பளிக்கான தளபாட உபகரணங்கள் புளொட் சுவிஸ் கிளையினரால் வழங்கி வைப்பட்டுள்ளது. மறைந்த சுவிஸ் கிளையைச் சேர்ந்த புளொட் உறுப்பினர் மனோகரன் முருகதாஸ் அவர்களின் நினைவாக சுவிஸ் புளொட் கிளையினரால் சேகரிக்கப்பட்ட நிதிமூலம் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

புளொட் அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற தபாலதிபர் சந்திரமோகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இன்று 14.02.2024 புதன்கிழமை மாலை 05 மணியளவில் குரும்பைகட்டி சனசமூக நிலையத்தில் ஓய்வுபெற்ற அதிபர் செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி தளபாடங்களை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

தலைமையுரை, விருந்தினர்களுரை, பிரதம விருந்தினர் உரை, நன்றியுரை ஆகியவற்றுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ப.தர்சானந், புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினரும் ஓய்வுபெற்ற தபாலதிபர் சந்திரமோகன் மற்றும் ஊரவர்கள், பொதுமக்கள், முன்பள்ளிச் சிறார்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

புலோலி, குரும்பகட்டி சனசமூக நிலையத்தால் நடாத்தப்படும் முன்பளிக்கான தளபாட உபகரணங்கள் புளொட் சுவிஸ் கிளையினரால் வழங்கியதுக்காக புளொட் தலைவரான பாராளுமன்ற உறுப்பினருக்கும், புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினருக்கும் முன்பள்ளியினர் மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மேற்படி நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் புளொட் லண்டன் பாலா அண்ணர் அவர்களுடன் இணைந்து புளொட் சுவிஸ் கிளையின் தோழர்களான புளொட் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரஞ்சன், நிர்வாகப் பொறுப்பாளர் செல்வபாலன், நிதிப் பொறுப்பாளர் வரதன், உப நிர்வாகப் பொறுப்பாளர் ரமணன், நிர்வாகசபை உறுப்பினர் அன்ரன், தேவண்ணர், குணா சுவிஸ் கிளை தோழர்களான பாபு, காந்தன், மனோ, ஆனந்தன், பிரபா, ராசன், புவி, ரூபன், மோகன் ஆகியோர் நிதி உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தகவல் & படங்கள், வீடியோ.. – புளொட் ஊடகப் பிரிவு, யாழ்.மாவட்டம்.

புலோலி குரும்பகட்டி சனசமூக நிலைய முன்பள்ளிக்கு தளபாடங்கள், புளொட் சுவிஸ் கிளையினால் வழங்கி வைப்பு.. நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. -VIDEO-

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி – நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. (வீடியோ)

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி – நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. (வீடியோ, படங்கள்)

புளொட் சுவிஸ் கிளையினரால் புலோலி கந்த முருகேசனார் முன்பள்ளி மற்றும் நூலகத்துக்கு நிதியுதவி – நேரில் கையளித்த புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. (Video, Photos)

You might also like

Leave A Reply

Your email address will not be published.