;
Athirady Tamil News

புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால முக்கிய தோழர்களில் ஒருவரும், அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முன்னாள் செயலாளருமான ஆர்.ஆர் அன்றில் இராகவன் எனும் தோழர்.வேலாயுதம் நல்லநாதர்..

நேற்றுவரை எம்மோடு இருந்தவரை
கூற்றனவன் கவர்ந்து சென்றதேனோ….?
தேற்றுவார் யாருமின்றி திணறுகின்றோம்
கதறியழும் தோழர்களுக்கு ஆறுதல் தரமாட்டீரோ..?

யாழ் வேலணையைப் பூர்வீமாகக் கொண்டு, யாழ்ப்பாணம் சுழிபுரம் மண்ணில் வாழ்ந்து, புளொட் முக்கியஸ்தராக வளர்ந்து பெருமையாய் விளங்கிய ஆர்.ஆர் அன்றில் ராகவன் எனும் திரு.வேலாயுதம் நல்லைநாதர் அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவராக கல்வியில் சிறந்து விளங்கிய அவர், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும், கழகத்துக்காக பல வழிகளிலும் தொண்டாற்றியவராகவும், அதன் தலைவராக இருந்த செலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் மிகப்பெரிய நம்பிக்கைக் குரியவராகவும் விளங்கினார். அவர் வெளிப்படுத்திய வீரத்தையும், உறுதியையும் மறக்க முடியாது. ஒரு நல்ல தோழராகவும், நல்ல மனதுடைய மனிதராகவும் அவர் திகழ்ந்தமை வாழ்க்கையில் பலராலும் பாராட்டப்பட்டது.

இன்று அவரின் மறைவு ஒரு வருடத்தை கடந்த போதிலும், அவர் விதைத்த நியாயத்தின் விதைகள் எப்போது விருட்சமாகும் எனும் உயரிய நோக்கில் செயல்படும் தோழர்கள் ஆதரவாளர்களின் அன்ஜசாலி நிகழ்வாக மேற்படி கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது தோழர்.ஆர்.ஆர் அவர்களின் இடதுசாரி சிந்தனைக்கேற்ப இன, மத வேறுபாடுகளைக் கடந்து முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வாக நடைபெற்றது.

வவுனியா சூடுவேந்தபுலவில் அமைந்துள்ள அல்இக்பால் மகா வித்தியாலயம் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் தேவையென ஊடகவியலாளரும், ஆசிரியருமான வசந்தரூபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் இந்நிகழ்வை ஒழுங்கமைத்தார்.

இவ் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தராக வளர்ந்து பெருமையாய் விளங்கிய ஆர்.ஆர் அன்றில் ராகவன் எனும் திரு.வேலாயுதம் நல்லைநாதர் அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களுக்கான ஆத்மா சாந்தியடைய வேண்டியும் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி நிகழ்வும், அதனை தொடர்ந்து புளொட் முக்கியஸ்தர் ஆர்.ஆர் அன்றில் ராகவன் எனும் திரு.வேலாயுதம் நல்லைநாதர் அவர்களின் படத்திற்கு தீபராதணை காட்டியும், அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாணவமாணவிகள் ஆசிரியைகளினால் கிறாத் இசைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் பிரதி அதிபர் உ. உபதுல்லா அவர்களும், ஆசிரியர்கள், அவர்களும் இணைந்து கொண்டு பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியிருத்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுக்கு மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நிதிப் பங்களிக்க உள்ளோர் விபரம் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை செயலாளர் தோழர்.தயாளன், சுவிஸ் தோழர்களான லெனின் எனும் செல்வபாலன், அன்ரன் எனும் லோகராஜா, ரமணன், தேவண்ணர் எனும் தவராஜா, போன்றோர் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் உதவி வழங்கல்” திட்டமானது, இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு, தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு,

இன்றைய நாளில் ஓராண்டு நினைவு தினத்தை காணும் தோழர் ஆர்.ஆர் அன்றில் இராகவன் எனும் அமரர் வேலாயுதம் நல்லநாதர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் மனதார வேண்டி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
22.02.2025

புளொட் முக்கியஸ்தர் தோழர் ஆர்.ஆர் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.