;
Athirady Tamil News

ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் *”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி போராட்டம்”* (அறிவித்தல்)

0

ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் *”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி போராட்டம்”* (அறிவித்தல்)

வெள்ளிக்கிழமை 27/06/2025
3PM to 6PM
In front of Sri Lanka High Commission in UK

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் எதிர்வரும் 27ஆம் திகதி ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் (in front of Sri Lankan High Commission in UK) வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

Date : Friday 27/06/2025
Time : 3pm to 6pm
Place : In front of Sri Lanka High Commission,
13 Hyde Park Gardens, Tyburnia, London, UK, W2 2LU
https://g.co/kgs/U3VuHjq

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் உள்ள மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது. இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும்.

ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள 100 க்கு மேற்பட்ட பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.

ஒழுங்கமைப்பு:
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு & அனைத்து தமிழ் அமைப்புகளும்
Movement for Self-Determination of Tamil Eelam & Other Tamil Organisations

மேலதிக விபரங்களுக்கு:
S.Yogi –
07404 369106
A.Raj –
07950 888047
Priyan –
07453 604900
Kumaran –
07448 768132

*”தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்”*
*”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”*

You might also like

Leave A Reply

Your email address will not be published.