;
Athirady Tamil News

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை அமரர் சு. வில்வரத்தினத்தின் 15 ம் ஆண்டு நினைவேந்தலும் நினைவுப்பகிர்வும் ( படங்கள் இணைப்பு )

0

நாட்டுப்பற்றாளர் அமரர் .சு . வில்வரத்தினம் அவர்களின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 19 – 12 – 2021 அன்று மாலை மூன்று மணியளவில் புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெறவுள்ளது .
பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி ந. சிறீகாந்தா , சட்டத்தரணி ந. காண்டீபன் ஆகியோர் சு.வில்வரத்தினம் தொடர்பான நினைவுகளை பகிரவுள்ளனர் .

இந்நிகழ்வில் வில்வரத்தினம் அவர்களின் வாசிகம் நூலும் வெளியிடப்படவுள்ளது . இதன் முதல் பிரதியை உதயன் பத்திரிகை நிர்வாக பணிப்பாளர் திரு .ஈ .சரவணபவன் அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளார் . வில்வரத்தினத்தின் பாடல்கள் அடங்கிய இறுவட்டும் வெளியிடப்படவுள்ளது . இதனை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு .இ.இளங்கோவன் அவர்கள் வெளியிட்டுவைக்கவுள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு .மறவன்புலவு சச்சிதானந்தன் , திரு . பொ. ஐங்கரநேசன் , திரு . மாணிக்கவாசகர் இளம்பிறையன் , மருத்துவர் .யோ .யதுநந்தனன் , மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா , சட்டத்தரணி அருட்பிரகாசம் நிரோஷன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர் . தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் அன்பளிப்புக்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தினரும் ( சூழகம் ) , படைப்பாளிகள் உலகம் அமைப்பினரும் வேண்டிக்கொள்கின்றனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.