;
Athirady Tamil News

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள்-முபாற‌க் முப்தி

0

மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள்.இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது.உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூற வேண்டும்.சிங்கள அரசாங்கத்தின் தேர்தல் முறையினை ஏற்றுக்கொள்கின்றார்கள்.அரசாங்கத்திற்கு சில அழுத்தங்களை வேண்டும் என கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள்.என்பது தான் உண்மையாகும்.எனவே தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்தார்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேராள‌ர் மாநாடு இன்று சாய்ந்த‌ம‌ருது க‌லாசார‌ ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டை பெற்ற‌ போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவ‌ர் தெரிவித்திருப்ப‌தாவ‌து

மாகாண சபை தேர்தல் இவ்வருடம் நடக்கும் என்பது அதிசயமாகும்.கடந்த காலங்களில் மாகாண சபை தேர்தல் இவ்வருடம் நடாத்தப்படும் என கூறப்பட்டது.ஆனால் இவ்வருடமும் மாகாண சபை தேர்தல் என்பது அமைச்சர் ஒருவரின் கூற்றினால் நடப்பது சந்தேகமாகவுள்ளது.2017 ஆண்டு மாகாண சபை தேர்தல் நடைபெற கூடாது என்பது தொடர்பில் சதி செய்யப்பட்டது.ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மக்கள் காங்கிரஸ் சுமந்திரன் தரப்பினர் ரணில் தலைமையில் ஒன்றிணைந்து மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்தார்கள் என்பதும் சகலரும் அறிந்த உண்மை.அதன் பிரதி பலனை தான் இந்நாடு தற்போது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது.அப்போது சிலர் மாகாண சபையை ஒழிப்பதற்கான சதி என்று கூறினார்கள்.தற்போது கூட அம்மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்குரிய சட்டப்பிரச்சினை இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவே உணர்கின்றோம். மாகாண திருத்த சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்த ரணிலும் சுமந்திரனும் ஹக்கீமும் றிசாட்டும் தான் கொணடுவந்த இவர்களே பொறுப்பேற்க வேண்டும்.அத்துடன் பகிரங்கமாகவே சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.அண்மையில் கூட நிசாம் காரியப்பரும் மாகாண சபையை ஒழிப்பதற்கு எமது கட்சியும் ஒரு காரணம் தான் என ஏற்றுக்கொண்டிருந்தார்.இவ்வாறெல்லாம் பார்க்கின்றபோது வேண்டுமென்றே இத்தேர்தலை நடாத்த விடவில்லை என்பது எண்ணத் தோன்றுகின்றது.இதை விட சுமந்திரன் ஹக்கீம் காரியப்பர் போன்றோர்கள் சட்டத்தரணிகள் ஆவர்.இவர்களுக்கு கூட இந்த சட்டங்கள் தெரியவில்லையா என்பதை நாங்கள் கேள்வியாக கேட்க விரும்புகின்றோம்.எங்களை பொறுத்தவரை மாகாண சபை தேர்தல் சரியான முறைப்படி நடத்தப்பட வேண்டும்.அத்துடன் மாகாண சபை முறைமையை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் தான் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டிருந்தன.ஆனால் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என இன்று ஒப்பாரி வைக்கின்றது.இது அவர்களது முரண்பாடான செயற்பாடாகவே இருக்கின்றது.உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை பின்பற்றுவார்களாயின் மாகாண சபை தேர்தல் வேண்டாம் என்றே கூற வேண்டும்.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல் வேண்டும் என ஒப்பாரி வைப்பதனால் பிரபாகரனை ஏற்க மறுக்கின்றார்கள்.சிங்கள அரசாங்கத்தின் தேர்தல் முறையினை ஏற்றுக்கொள்கின்றார்கள்.அரசாங்கத்திற்கு சில அழுத்தங்களை வேண்டும் என கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கின்றார்கள்.என்பது தான் உண்மையாகும்.எனவே தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் 12வ‌து பேராள‌ர் மாநாடு க‌ட்சியின் த‌லைவ‌ர் முஸ்ன‌த் முபாற‌க் த‌லைமையில் ந‌டை பெற்ற‌ இம்மாநாட்டில் க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

க‌ட்சியின் செய‌லாள‌ர் இர்பான் முஹிதீன் சிற‌ப்புரையாற்றினார்.ஸ்ரீல‌ங்கா ஐக்கிய காங்கிர‌சின் ஏற்பாட்டில் ந‌டை பெற்ற‌ பெண்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌ ப‌யிற்சிப்ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொண்டோர்க‌ளுக்கான‌ சான்றித‌ழ்க‌ளும் இம்மாநாட்டின் போது வ‌ழ‌ங்கி வைக்க‌ப்ப‌ட்ட‌மை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.