;
Athirady Tamil News

18 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் நிறுவனம் சந்தித்த சோகம்- என்ன தெரியுமா?…!!

0

உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:-

பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம். மேலும் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளனர்.

நியூயார்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மெட்டா மட்டும் இல்லாமல் ட்விட்டர், ஸ்னாப்சேட், பின்ட்ரஸ்ட் போன்ற சமூக வலைதளங்களின் பங்கு மதிப்பும் குறைந்துள்ளது. இதற்கு காரணம், இளைய தலைமுறையை சேர்ந்த பயனர்கள் போட்டியாளர்களின் தளங்களை பயன்படுத்துவதே ஆகும்.

மார்க் ஜுக்கர்பெர்க்

மேலும் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ்சில் அமல்படுத்தியுள்ள தனிநபர் உரிமைகளின் மாற்றம், விளம்பர நிறுவனங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள பயன்பாட்டாளர்களை அளவிடுவதை கடினமாக்கியுள்ளது. இதுவே 1000 கோடி டாலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதால் மெட்டா நிறுவனம் பிற சமூக வலைதளங்களுடனான போட்டியை குறைத்துள்ளது. மேலும் டிக்டாக் நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிவேகமாக வளர்ந்து வருவதும் பேஸ்புக்கின் பயனர்கள் குறைவதற்கு காரணம்.

இவ்வாறு மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.