;
Athirady Tamil News

வடக்குக்கு வருகை தந்த ஹட்டன் நஷனல் வங்கியின் தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!! (படங்கள்)

0

ஹட்டன் நஷனல் வங்கியினுடைய பணிப்பாளர் சபை தலைவர் திருமதி அருணி குணதிலக தனது வடக்குக்கான பயணத்தின் போது வங்கியின் வாடிக்கையாளர்களான தொழில் முயற்சியாளர்களை சந்தித்ததுடன், வங்கியின் கூட்டு சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் ஊடான உதவிகளையும் வழங்கிவைத்தார்.

கடந்த வியாழக்கிழமை வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த அவர் இரண்டு நாள்கள் தங்கியிருந்தார்.
இதன்போது பணிப்பாளர் சபை தலைவர் திருமதி அருணி குணதிலகவின் தலைமையில் தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு தேவையான கட்டில்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஹட்டன் நஷனல் வங்கியினால் புற்றுநோய் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறுபட்ட உதவிகள் சமூகப் கூட்டுப் பொறுப்பு செயற்திட்டத்தின் (CSR) கீழே வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், ஹட்டன் நஷனல் வங்கியின் மன்னார் கிளையினால் மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பினூடாக வலுப்பெற்று வரும் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன்கள் வழங்கி வைக்கப்பட்டன. அந்த நிகழ்விலும் பங்கேற்ற வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவி மன்னார் மறைமாவட்ட ஆயரையும் சந்தித்தார்.

வடக்கில் உள்ள வங்கிக் கிளைகளுக்குச் சென்ற பணிப்பாளர் சபை தலைவர் திருமதி அருணி குணதிலக, தொழில் முயற்சியாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.