;
Athirady Tamil News

காங்கோ: ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து – 17 பேர் பலி

0

கின்ஷாசா,

காங்கோவில் ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் கிவிலு மாகாணம் கிக்விட் நகரில் இருந்து நேற்று தலைநகர் கின்ஷாசாவுக்கு ராணுவ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் ராணுவ அதிகாரிகள் உள்பட 17 பேர் பயணம் செய்தனர்.

விமான விபத்து – 17 பேர் பலி

இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் மன்சொ என்ற பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதில் விமானத்தில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் உள்பட 17 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.