;
Athirady Tamil News

ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தை முடக்கிய ஏ.ஐ.; இந்தியாவுக்கு எச்சரிக்கை

0

இந்த விவகாரத்தில் இந்தியா ஒழுங்கு முறைகளை கொண்டு வர வேண்டும். ஏதேனும் ஒரு பெரிய சம்பவம் நடந்து, முக்கிய துறைகளில் ஒன்றின் அல்லது அணுசக்தித்துறையின் ரகசியங்களை யாராவது திருடினால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும்’ என எச்சரிக்கை விடுத்தார்.

ஏ.ஐ. துறையில் பெரும் அதிர்ச்சி
ஆஸ்திரேலிய அரசு இணையதளம் மற்றும் அமைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டறிவதற்கு செயற்கை தொழில்நுட்ப (ஏ.ஐ.) மென்பொருளை (ஏஜென்டு) சில மாதங்களுக்கு முன்பு அரசு நிறுவியது. ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் இந்த ஏஜென்டு தனது பணியை செய்த அதேவேளையில், அந்த இணையதளத்தையே முடக்கியதுடன், அரசின் தரவுத்தளங்களில் உள்ள தவறான சான்றுகளை தேடியது. மேலும் தனிப்பட்ட என்கிரிப்டட் திறவு கோல்களையும் அணுக முயன்றது. இந்த சம்பவம் ஏ.ஐ. துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஏ.ஐ. ஏஜென்டுகளின் பாதுகாப்ப குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து இந்தியா இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க ஏ.ஐ. நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளன. ஏ.ஐ.என்ஸ்யூர்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் சீனிவாஸ் பத்மநாபுனி கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் இந்தியா ஒழுங்கு முறைகளை கொண்டு வர வேண்டும். ஏதேனும் ஒரு பெரிய சம்பவம் நடந்து, முக்கிய துறைகளில் ஒன்றின் அல்லது அணுசக்தித்துறையின் ரகசியங்களை யாராவது திருடினால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும்’ என எச்சரிக்கை விடுத்தார். ஒரு ஆஸ்திரேலிய சமூக வலைத்தளத்தில் நடந்தது இந்திய வலைத்தளத்திலோ அல்லது இந்திய அரசாங்க அமைப்பிலோ நடக்கலாம் எனக்கூறிய அவர், அப்படி நடந்தால் அது மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.