;
Athirady Tamil News

நாளை முதல் கொழும்பில் வரவுள்ள புதிய நடைமுறை

0

நாளை செவ்வாய்க்கிழமை (29.09.2026) தொடக்கம் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பேருந்து முன்னுரிமைப் பாதை விதிமுறைகள் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்போது வீதி ஒழுங்குகள் மற்றும் போக்குவரத்து சட்டங்கள், பேருந்து முன்னுரிமைப்பாதை விடயம் என்பன தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவசரத் தேவைகளைத் தவிர
அதன்பிரகாரம் காலை 6:00 – 9:00 மணி மற்றும் மாலை 4:00 – 7:00 மணி வரை பேருந்து முன்னுரிமைப்பாதை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளைத் தவிர திருப்பங்கள் மற்றும் அவசரத் தேவைகளைத் தவிர பிற வாகனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.