;
Athirady Tamil News

மதுபோதையில் மனைவியை கொலை செய்த கணவன்; தவிக்கும் மூன்று பிள்ளைகள்

0

இரத்தினபுரி ரக்வான பகுதியில், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்ட அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் ரக்வான, கண்டகும்புரவைச் சேர்ந்த 39 வயதான இரு குழந்தைகளின் தாயான நவலகே நாடிகா ஜெயமாலி விக்ரமரத்ன ஆவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குடிபோதையில் வீடு திரும்பி மனைவியுடன் வாக்குவாதம்
இரத்னபுரியில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறை துணை முகாமில் பணியாற்றும் சந்தேகநபர், 25-ஆம் திகதி தனது பணி முடிந்ததும் குடிபோதையில் வீடு திரும்பி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோப்பி அறுவடைக்கு பயன்படுத்தப்படும் உறுதியான மரத்தாலான ‘கோப்பி கம்பு’ ஒன்றைக் கொண்டு அப்பெண்ணின் தலை மற்றும் உடலில் சந்தேகநபர் கடுமையாகத் தாக்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் கம்பு பின்னர் வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட பொலிஸார், சந்தேகநபர் அன்று தனது மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, இரவு உணவிற்காக உணவகத்திலிருந்து ‘ஃப்ரைட் ரைஸ்’ வாங்கி வந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

அதிகாலை 2 மணியளவில் தனது மனைவி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்ற சந்தேகநபர், அவர் படுக்கையில் இறந்து கிடப்பதைக் கண்டார். சந்தேகநபர் அண்டை வீட்டாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் ரக்வான பொலிஸாருக்கும் அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் அளித்தனர்.

தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது தான் மனைவியை தள்ளியபோது அவரது தலை கட்டிலின் சட்டத்தின் ஒரு பகுதியில் மோதியதாகவும் கணவர் பொலிஸாரிடம் கூறினார்.

இன்னிலையில் சம்பவம் தொடர்பில் கணவரை கைது செய்த பொலிசார் , அவரை நேற்று (27 நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் மேலதிக விசாரணைகாளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.