;
Athirady Tamil News

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் வெற்றி உலகிற்கு பல படிப்பினைகளை வழங்குகிறது- பில்கேட்ஸ் பாராட்டு..!!

0

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 193 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தகுதி வாய்ந்தவர்களுக்கு போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டம் அடைந்துள்ள வெற்றிக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற நிகழ்வில் பங்கேற்ற மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவுடன் நடந்த சந்திப்பில் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

மன்சுக் மாண்டவியாவை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதார விளைவுகளை அளவிடுவதில் இந்தியாவின் வெற்றி ஆகியவை உலகிற்கு பல படிப்பினைகளை வழங்குகிறது என்றும் கேட்ஸ் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ் உடனான சந்திப்பு குறித்து தமது டுவிட்டரில் பகிர்ந்துள்ள மாண்டவியா, டிஜிட்டல் வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய் கட்டுப்பாடு மேலாண்மை, மலிவு மற்றும் தரமான நோயறிதல் முறை மற்றும் மருத்துவ சாதனங்களின் மேம்பாட்டை வலுப்படுத்துதல் உள்பட சுகாதாரப் பாதுகாப்பு தொடரபாக நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.