;
Athirady Tamil News

நாட்டின் பாதுகாப்பு குறித்து கமல் குணரத்ன கருத்து!!

0

தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (2) தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு சூழலானது பாதிக்கப்படக்கூடிய, நிச்சயமற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற தன்மை கொண்டது என்பதால், புவிசார் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு சூழலை வகைப்படுத்தும் முக்கிய காரணிகளின் நிலையான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு, பல வடிவங்களில் மற்றும் தரங்களில் வரும் சாத்தியமான அச்சுறுத்தலை மதிப்பிட அவசியப்படும்”, என வலியுறுத்தினார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) நேற்று ‘இலங்கையின் பாதுகாப்புக் கொள்கை கடந்த, நிகழ்வு மற்றும் எதிர்காலம்´ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜெனரல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்நாட்டு மதத் தீவிரவாதத்தின் மீது தாக்கம் செலுத்தும் நாடு கடந்த தீவிரவாதம் குறித்து குறிப்பிட்டு பேசிய அவர், “பிரிவினைவாதத்தை கோரிய எல்.ரீ.ரீ.ஈ க்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டில் அதன் மறைமுக ஆதரவுக் குழுக்களால் கணிசமான அச்சுறுத்தல்கள் உண்டு” என தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில், அவர்கள் தொடர்ந்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத்தக்க உதவிகளைப் பெற முனைவது, சமீபத்திய மனித உரிமைகள் குற்றச்சாட்டுகளின் மூலம் தெளிவுபடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், “சமீபத்தில் அரசிற்கெதிராக நாட்டில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் மற்றும் அத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் சட்டத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதை, நிராகரிக்க முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

மாறிவரும் பாதுகாப்பு சூழலுக்கு இடமளிக்கும் மற்றும் திறம்பட பதிலளிக்கும் ஒரு பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு, ஒரு வலுவான, தகவமைக்கக்கூடிய மற்றும் விரிவான பாதுகாப்புக் கொள்கை கட்டாயமாகக் கருதப்படுகிறது, என்றார்.

இணையம் மற்றும் தகவல் தொடர்பாடல் கள அச்சுறுத்தல்கள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பணமோசடி போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் போக்குகளை மேற்கோள் காட்டி பேசிய அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சமூக ஒற்றுமையை சிதைப்பதுடன் நமது சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பை சீர்குலைக்கும் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்ட அச்சுறுத்தல் உணர்வு மாற்றங்களை நினைவுகூர்ந்த பாதுகாப்புச் செயலாளர், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சினைகள், பயங்கரவாதம், கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் ஆட்சிக்கு எதிரான சமீபத்திய எழுச்சி தொடர்பில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இதுபோன்ற முன்னொருபோதும் இல்லாத சவால்கள், ´தேசிய பாதுகாப்புக் கொள்கை´ தொடர்பில் வலுவான அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்கு எங்களை நிர்பந்தித்துள்ளன, என கூறிய அவர் தேசிய பாதுகாப்பு எந்திரத்திற்கு எதிராக எழும் பேரழிவுகளைத் தடுக்க, தீய விளைவுகளுக்கு எதிராக முன்கூட்டியே எதிர் நடவடிக்கைகளைத் மேட்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினார்..

பாதுகாப்பு மாற்று அத்துறையில் இயங்கக்கூடிய தன்மையை உருவாக்குவதன் மூலம் வலுவான பாதுகாப்புக் கொள்கை கட்டமைப்பை நிறுவுவதற்கு, அதன் வளர்ச்சி செயல்பாட்டில் சில கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்” எனக்கூறிய அவர் “பாதுகாப்பு பிரச்சினைகள், அதனுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வழிமுறைகள் தொடர்பில் ஒரு முழுமையான அணுகுமுறையானது, பாதுகாப்பு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க சிறந்த வழியாகுக அமையும்” எனவும் தெரிவித்தார்.

இச்செயலமர்வை நடத்தும் பல்கலைக்கழகத்தின் முயற்சியைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலர், முக்கிய அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் இந்த மன்றம், நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை ஆலோசிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, தொடர்புடைய துறைகளில் உள்ள தேசிய நிபுணர்களை ஒன்று சேர்ப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது என்றார்.

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், பேராசிரியர் ரொஹான் குணரத்ன தலைமை உரையை நிகழ்த்தினார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் ஜெரார்ட் டி சில்வா, தேசிய பல்கலைக்கழகங்களின் முக்கிய பிரமுகர்கள், கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை அதிகாரி`, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரி, பேச்சாளர்கள், பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.