;
Athirady Tamil News

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டம்-கலெக்டர் தகவல்..!!

0

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.50 கோடிக்கு அனுமதி

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின்போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு 2022-2023-ம் ஆண்டிற்கு 2 கூறுகளுடன் கொரோனா உதவி மற்றும் தொழில்முனைவோருக்கான நிவாரண திட்டத்தை அறிவித்து ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது. அவை மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் மற்றும் ஊக்கத் திட்டம் ஆகும். மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில்முனைவோரை மீண்டும் தொழில்களை நிறுவ அல்லது புதிய நிறுவனத்தை தொடங்க அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

மேம்பாட்டு பயிற்சி

2020-2021-ல் தொற்று நோயினால் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், தொழில் நிறுவன உரிமையாளர் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன் மூலம் பயன் பெறலாம். அதிகபட்ச திட்ட செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் இருக்கும்.

மானியத்துடன் இணைக்கப்பட்ட திட்டத்திற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமில்லை.

ஊக்குவிப்பு திட்டம்

ஊக்குவிப்பு திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்பவர்களுக்கானது. ஊக்க திட்டத்திற்கு, தொழில்நுட்ப மேம்படுத்தல் அல்லது நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொரோனா தொற்று நோயால் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியுடையவர்கள். மூலதன மானியமாக ஆலை மற்றும் எந்திரங்களின் மதிப்பில் 25 விழுக்காடு அதிகபட்சம் ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும். இந்த திட்டம் 2022-2023-ம் ஆண்டிற்கு மட்டும் நடைமுறையில் இருக்கும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இந்த திட்டம் தொடர்புடைய தகவல்களை பெற விரும்புவோர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.