திருடன்-போலீஸ் விளையாட்டில் விபரீதம்: 11 வயது சிறுவன் குண்டு பாய்ந்து பலி..!!
உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ் வால். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். இவரது 10 வயது மகன் நேற்று மாலை பக்கத்து வீட்டு நண்பர்களுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடினான். அவன் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்தான். அது பொம்மை துப்பாக்கி என நினைத்த அவன் விசையை அழுத்தினான். அப்போது அதில் இருந்து வெளியேறிய குண்டு விளையாடிக்கொண்டு இருந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் உடலில் பாய்ந்தது. இதில் காயம் அடைந்த அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.