;
Athirady Tamil News

தண்ணீருக்கு எத்தனை கண்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!! (படங்கள்)

0

கவிஞர் சோலைக்கிளி எழுதிய ‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’ நூல் அறிமுக விழா சனிக்கிழமை (17) கல்முனை தனியார் மண்டபத்தில் அருந்தந்தை அன்புராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் இலங்கைப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கவிதை நூலினை வெளியீட்டு வைத்தமை குறிப்பிடதக்கது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை ஓய்வுநிலை பேராசிரியர் கலாநிதி ஏ.எஸ்.ஆனந்தன் மற்றும் பேராசிரியர் யோகராஜா, முன்னாள் ஓய்வூபெற்ற பதிவாளர் மன்சூர் ஏ.காதர் கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண கலை இலக்கியத்தை புதுபித்துக்கொண்டு இருக்கின்ற பணிப்பாளர் நவநீதன் சரவணமுத்து, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ஏ.எம்.அஸீஸ், உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

கலாபூசணம் பாலமுனை பாறூக், எழுத்தாளர் எஸ்.எல்.மன்சூர், கவிஞர்களான உமாவரதராஜன், அக்கரையூர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் இலக்கிய சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கலைஞர் ஜவாட் அப்துல் றசாக், கிண்ணியா பிரதேச செயலாளர் முஹமட் ஹணி, பேராசிரியர் முஹமட் அஸ்ராப், கல்முனை பிரதேச செயலாளர் லியாத் அலி, வைத்தியர் லோகநாதன் புஸ்பலதா, போன்றோர் சிறப்புரையாற்றியதுடன், எழுத்தாளர்களான எம்.அப்துல் றஸ்ஸாக், பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப் ஆகியோர் நூல் மீதான உரையினை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வை ஆராம்பித்து வைத்து உரையாற்றிய மக்கத்தார் மஜிட், வரவேற்புரையை சமூர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.ஏம்.சாலிஹ் நிகழ்த்தினார்.

இறுதியில் புகழ்பெற்ற கவிஞர் சோலைக்கிளியின் 13வது கவிதை தொகுப்பு நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில்வவுனியா மாவட்ட முன்னாள் செயலாளர் ஹனீபா, முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.சலீம் கலந்துகொண்டதுடன்,
கலை, கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், முக்கிஸ்தர்கள் எனப்பலரும் கந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.