;
Athirady Tamil News

புத்திகெட்ட மனிதரெல்லாம் திரைப்படம் – இலவச காட்சி!!

0

யாழ்ப்பாண இளைஞர்களால் கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முதலாவது வெற்றி ஆண்டு எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி கொண்டடாடப்படவுள்ளது. எங்கட படம் என விளம்பரப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் தங்களின் படமாகவே கொண்டாடப்பட்டு பெரு வெற்றி பெற்ற திரைப்படத்தின் ஓராண்டு பூர்த்தியினை மக்களோடு மக்களாக கொண்டாட முன்வந்துள்ளனர் படக்குழுவினர்.

அந்த வகையில் எதிர்வரும் சனிக்கிழமை 24 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இத்திரைப்படத்தினை யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இலவசமாக காட்சிப்படுத்தவுள்ளனர். இதுவரை திரைப்படத்தை பார்வையிட தவிறியோரும் மேலும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என விரும்புவோரும் இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம் இருப்பதனால் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு படக்குழுவினர் மகிழ்வுடன் அழைக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.