;
Athirady Tamil News

பெண்களுக்கான உரிமைகள் எதிர்வரும் தேர்தல்களில் உறுதிப்படுத்த வேண்டும்!! (படங்கள், வீடியோ)

0

பெண்களுக்கு எதிரான அனைத்து பாரபட்சங்ளையும் அகற்றி பெண்களின் சமமான அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்(கபே)தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னெடுக்கெப்படும் ‘ஜனனி’ டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் செவ்வாய்க்கிழமை(20) மாலை மூன்றாம் கட்ட நிகழ்வின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

மேலும் அங்கு கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்ததாவது

இலங்கையில் செயல்வலுவிலுள்ள சட்டதிற்கமைய பெண்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் இல்லை.பெண்கள் இரண்டாம் தரப் பிரசைகளாக தற்போது வரை ஆக்கப்பட்டுள்ளனர் என்பதே எமது கருத்தாகும்.சமூகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய இடம் கிடைப்பதில்லை.ஆதலால் அரசியல் அடிப்படையில் பெண்களை வலுவூட்டல், உள்ளூரதிகார சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தம்இ உள்ளூரதிகார சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் முகவர்கள்இ பெண் தொழிற்படுனர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தற்போது கூட கபே அமைப்பு உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் தேர்தல் ஆணைக்குழு ஒன்றிணைந்து பெண்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்வதோடு மாவட்ட மட்டத்தில் அதவாது அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களூடாக தேர்தல்கள் செயன்முறைகள் சனநாயகம் சர்வஜன வாக்குரிமை மற்றும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் பெண்களின் அரசியல் பங்கேற்பு தொடர்பாகவும் பெண்களை அறிவுறுத்தும் செயலமர்வுகள் நாடு தழுவிய அடிப்படையில் நடாத்தப்படுகின்றன.

இருந்த போதிலும் சகல தரப்பினரும் பெண்களின் உரிமைகளை மதித்து செயற்படுத்த முன்வருவதுடன் உள்ளுராட்சி பிரதிநிதித்துவத்துக்காக பெண்களுக்காக 25% ஒதுக்கீடு (Quota) அறிமுகம் செய்தல் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் தீர்வு காணப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் பெண் தலைமைகளுக்கான டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட செயலமர்வில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்(கபே) அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் இணைப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்(கபே) தேசிய நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் வளவாலராக ஜனநாயக மறு சீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கை நெறிக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கலந்து கொண்டிருந்ததுடன் பெண் தலைமைகள் மேடைப்பேச்சுக்களையும்இஊடக அறிக்கையிடல்களையும் எவ்வாறு மேற்கொள்ளுதல் என்பது தொடர்பாகவும்,தேர்தல் பிரச்சார நிதி சட்டம், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதம் மற்றும் தகவல் அறியும் சட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.

நிகழ்வின் இறுதியில் இதில் கலந்து கொண்ட பெண் தலைமைகளினால் ஊடகங்களுக்கு அறிக்கையிடும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.