;
Athirady Tamil News

மருதமுனை House Of English இன் “8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்”!! (படங்கள், வீடியோ)

0

மருதமுனை House Of English இன் “8 ஆவது ஆண்டிறுதி கலை நிகழ்வும் பரிசளிப்பும்” மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் முதலில் பிரதம அதிதிகள் மாலை இடப்பட்டு வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிகழ்வு ஆங்கிலப் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம் மூஸா தலைமையில் வெள்ளிக்கிழமை(23) மாலை இடம்பெற்றது.

பின்னர் பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.தொடர்ந்து வரவேற்புரை வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.பிரதம அதிதிகளின் உரை பரிசளிப்பு வைபவம் என தொடர்ச்சியாக இடம்பெற்றன.

அத்துடன் விடுகதைகளும் விடைகளும் ஹிந்தி பாடலுக்கான நடனம் விநோத உடை போட்டி என்பன இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் திறமை காட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீம் கௌரவ அதிதிகளாக சட்டத்தரணி சஞ்ஜீத் காதர் இப்றாகீம் ,கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவ அதிகாரி எம்.ஏ பர்ஹானா றிஸ்வி, றோயல் கம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ முஹமட் அஸ்பில், இலங்கை டைடம் பிரைவேட் லிமிடெட் இணை ஸ்தாபகர் நஸ்மி மீரா முகைதீன் ,விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தீன் ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம்.ஏ காதர் ,சிரேஸ்ட ஊடகவியலாளரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் உயர் பீட உறுப்பினருமான எஸ்.சம்சுதீன் ,உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதானிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

நிகழ்வின் இறுதியாக ஆங்கிலப் பாடசாலையின் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களுக்கு விண்ணப்பங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.