;
Athirady Tamil News

புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வுகள்!! (படங்கள் இணைப்பு )

0

வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் புங்கை விருட்சம் நூல் வெளியீட்டு நிகழ்வு 04 – 01- 2023 அன்று புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்றது. பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி திரு .க. பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை ஓய்வுநிலை பேராசிரியர் கா. குகபாலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு. ந. கருணாகரகுருமூர்த்தி, வேலணை பிரதேச சபை செயலாளர் திரு. தி. தியாகச்சந்திரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான திரு. க. நாவலன், திரு.க. வசந்தகுமாரன், திருமதி. சா. யசோதினி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டதோடு தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் , வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 10000 நிதியுதவியில் மேற்படி நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளில் பங்குபற்றியிருந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன . மேலும் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் மாணவர்களின் ஒத்துழைப்புடன் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.