;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் முற்றுகையிடப்பட்ட அரச அதிகாரியின் வீடு ; கேஸ் அடுப்பில் நடத்தப்பட்ட செயல் அம்பலம்

0

மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மதுவரித் திணைக்களத்தின் மதுவரிப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் நாவற்குடா, அம்பாள் வீதியில் தீடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

கசிப்பு உற்பத்தி
இதன்போது வீடு ஒன்றில் கேஸ் அடுப்பில் ஸ்ரீமர் வைக்கப்பட்டு நுட்பமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் 1600 மில்லிலீற்றர் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாய திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற உத்தியோகத்தருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் குறித்த நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதனால் அவருக்கு 26000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.