;
Athirady Tamil News

ரஷ்ய தாக்குதல் பதற்றம் ; மூடப்பட்ட போலந்து விமான நிலையங்கள்

0

ராணுவ நடவடிக்கைகள் காரணமாக போலந்தில் உள்ள செஷோவ் மற்றும் லூப்லின் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, போலந்தில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

ரஷ்யாவின் விமானபடை உக்ரைன் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலந்து வான்வெளியில் ராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இதன் காரணமாக செஷோவ் மற்றும் லூப்லின் விமானநிலையங்கள் சிறிது நேரம் முடக்கப்பட்டன.

பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு இரு விமான நிலையங்களும் வழக்கம்போல் செயல்பட தொடங்கின.

You might also like

Leave A Reply

Your email address will not be published.