;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 114 பேருக்கு கொரோனா!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்தது. இன்று 114 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 154 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 144 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 48 ஆயிரத்து 309 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,119 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,726 ஆக நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.