யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நினைவு நிகழ்வு 30.09.2026 பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வரவேற்புரையை தமிழ் சங்கத் தலைவர் கலாநிதி கி அருட்செல்வி ஆற்றுவார். நினைவுரைகளை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ் இந்திய துணை தூதர் சாயிமுரளி செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் ஆகியோர் ஆற்றுவர்.
ஆர்வலர் எவரும் நிகழ்வில் கலந்து கொண்டு பேராசிரியர் பாப்பையாவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தலாம் எனத் தமிழ்ச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்