;
Athirady Tamil News

வலி வடக்கில் 33 வருடங்களின் பின்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு!!

0

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது.

காங்கேசன்துறை மத்தி , ஜே/ 234 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட , வெளிச்ச வீட்டில் இருந்து துறைமுகம் வரையிலான 40 குடும்பங்களுக்கு சொந்தமான 26 ஏக்கர் காணியும் , இதே கிராம சேவையாளர் பிரிவில் , இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு அமைந்திருந்த 45 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியும் , மயிலிட்டி வடக்கு ஜே / 246 கிராம சேவையாளர் பிரிவில் 17 குடும்பங்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணியும் , அன்றோனிபுரம் பகுதியில் 13 ஏக்கர் காணியும் , நகுலேஸ்வரம் ஜே/ 226 கிராம சேவையாளர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளைய தினம் ஒப்படைக்கப்படவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.