;
Athirady Tamil News

மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்

0
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (13.03.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், நகர பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்  எஸ். சோதிநாதன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் எஸ். சிறி வாகீசன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான  எஸ். கபிலன், திட்டமிடல் பணிப்பாளர் .இ சுரேந்திரநாதன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

இதன்போது தலைமையுரையாற்றிய  கருணநாதன் இளங்குமரன், கடந்த வருடம் 250 மில்லியன் ரூபா மற்றும் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசுசரிய – பாடசாலை பேரூந்துச் சேவை, கெமி செரிய – கிராமிய இணைப்பு பேரூந்து சேவை, நிசி செரிய – பின்னிரவு பேரூந்து சேவை மற்றும் கடல்வழிப் போக்குவரத்து ஆகியன தொடர்பாக விரிவாக ஆராந்து, அனைவரும் ஒன்றிணைந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் குரூஸ், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.